நிலவே என்னிடம் நெருங்காதே!!-1

 


நிலவே என்னிடம் நெருங்காதே!!

முன்னுரை:

 ஜமீன்தார் தாத்தாவுக்கும் அவர் செல்ல பேரனுக்கும் நடுவில் நடக்கும் பனிப்போரில் இரண்டு பெண்களின் வாழ்வு சிக்கி கொண்டு தவிப்பது தான் கதையின் போக்கு...

உன்னை மணம் முடித்து உன் எதிர்காலத்தை என்னுடன் பகிர்ந்து கொள்வேன் என்று வாக்களித்த தன் மனம் கவர்ந்த காதலியா?  இல்லை கட்டாயத்தினால் அக்னி சாட்சியாய் உன்னை என்றும் உடன் இருந்து காப்பேன் என்று உறுதி அளித்து தாலிகட்டிய மனைவியா?  என்று தடுமாறும் நாயகன் என்ன முடிவு எடுத்தான் என தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்... 

இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான காதல் கதைதான்..எனது இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து  என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.. தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.. Happy Reading!!!

********

அத்தியாயம்-1

கோயம்புத்தூர் டூ மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பறந்து கொண்டிருந்தது அந்த ஆடி கார்...இல்லை முறுக்கி கொண்டிருந்தான் அந்த நெடியவன்..

இதுவரை அத்தனை வேகம் பறந்ததில்லை அந்த கார்... முதன்முறையாக அவ்வளவு வேகம் செல்லம் அந்த ஆடி கார் கூட தன்னுடைய திறமைக்கு கிடைத்த சவாலாக அவனுக்கு ஒத்துழைத்து அவனுடன் சேர்ந்து பறந்து கொண்டிருந்தது...

யார் இவன்? கார் ரேஸ்க்கு போக மறந்து இங்கே வந்துவிட்டானா?  இல்லை ரேஸ்க்காக மக்கள் புழங்கும் இந்த நெடுஞ்சாலையில் பயிற்சி செய்கிறானா?  வாருங்கள் பார்க்கலாம்…. 

இவ்வளவு வேகத்தில் அந்த காரை விரட்டி கொண்டிருப்பவனை உற்று கவனித்தால், திகைத்து போவீர்கள்...     

கட்டான உடற்கட்டு.. தினமும் உடற்பயிற்சி செய்வதால் உருண்டு திரண்டிருந்த தேகம்.. அலை அலையாக அசைந்தாடும் அடர்ந்த கேசம்.. கண்களில் ஒரு வித ஊடுருவும் பார்வை.. அழுத்தமாக மூடியிருந்த உதடுகள்..சூரியனை போன்ற வெம்மையில் தகதகக்கும் முகம்... 

நல்ல வேளையாக ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து இருந்தவன் வழக்கம் போல சீட் பெல்ட் ஐ இழுத்து மாட்டி இருந்தான்....

இல்லை என்றால் அவன் பறக்கும் வேகத்திற்கு மேல் கூரையை பிய்த்து கொண்டு பறந்திருப்பான்....  

ஆனால் அவன் அணிந்திருந்த காஸ்ட்யூம்தான் அவன் பறக்கும் வேகத்திற்கு பொருத்தம் இல்லாமல் ஆக்வாட்(awkward) ஆக இருந்தது....

அந்த விலை உயர்ந்த ஆடி காரில் அத்தனை வேகத்தில் பறப்பவன் டைட்டான ஜீன்ஸ்ம் உடலை ஒட்டி அவன் திடகாத்திரமான பரந்த மார்பும் சிக்ஸ் பேக் தேகமும் அப்படியே திமிறி கொண்டு வெளியில் தெரியுமாறு ஒரு டீசர்ட் ஐ அணிந்திருப்பான் என்று பார்த்தால் அதற்கு முற்றிலும் மாறாக பட்டு வேஷ்டி சட்டை அணிந்திருந்தான்...

தோளில் ஒரு துண்டு மட்டும் மிஸ்ஸிங்..

அவனுடைய அடர்த்தியான சிகையின் இடையில் ஆங்காங்கே  ஒட்டியிருந்த மஞ்சள் கலந்த ஒன்றிரண்டு அரிசியும்,  கையில் கட்டியிருந்த கங்கணம், அவன் நீண்ட கழுத்தில் இருந்து வந்த பூமாலை வாசமும், பரந்து விரிந்த தோள்களில் ஒட்டி இருந்த பூவின் சிறு இதழும்  நெற்றியில் வைத்திருந்த சந்தனம் மற்றும் குங்குமமாய் அவனை மீண்டும் உற்று பார்க்க, அப்படியே கல்யாண மாப்பிள்ளை போல இருந்தான் அந்த நெடியவன்..

தோற்றம் அப்படியே கல்யாண மாப்பிள்ளையாக இருந்தாலும் கல்யாண மாப்பிள்ளைக்கே உரித்தான அந்த மகிழ்ச்சி, பூரிப்பு, தன் சரி பாதியை கண்டு கொண்டு அவளை தன்னவளாக்கி கொண்ட வெற்றி கழிப்பு என்று எல்லாம் மிஸ்ஸிங்..

மாறாக அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது..எதிரில் இருப்பவர்களை  துவம்சம் செய்யும் ஆவேசம் அவன் முகத்தில் தெறித்தது... அந்த ஆவேசத்தை எல்லாம் சேர்த்துத்தான்  அந்த கார் ஸ்டியரிங் ல் காட்டி அந்த காரை முறுக்கி கொண்டிருந்தான் அவன்..

அந்த கார் அவன் சொல் கேட்டு அடங்கி பறந்து கொண்டிருந்தது.. ஆனால் அவன் மனம் மட்டும் அவன் கட்டளைக்கு அடங்காமல் தறி கெட்டு ஓடி கொண்டிருந்தது...

எல்லாரையும் ஒரு பார்வையில் அடக்கி விடுபவன் அவன் மனதை மட்டும் அடக்க முடியவில்லை... அது மட்டும் எப்பவுமே வேற ஒருத்தருக்கு மட்டுமே அடங்கி போய் விடுகிறது...

அந்த வேற ஒருத்தர் என்ன சொன்னாலும் நாய் குட்டியாய் வாலை ஆட்டி கொண்டு அடங்கி விடுகிறது...அவனும் எத்தனையோ முறை தன் மனதை அடக்கி அவர் சொல்வதை கேட்காதே என்று ஆணை இட்டிருக்கிறான்.. ஆனால் அதெல்லாம் அதனிடம் பலிக்கவில்லை...

எப்பவும் போல அந்த வேற ஒருவரிடமே வாலை ஆட்டிகொண்டு கையை வாயில் வைத்து சலாம் போட்டு கொண்டு நின்றது அவன் மனம்.... 

இதுவரை அவன் வாழ்வில் நடந்தது, அந்த வேற ஒருத்தருக்கு அடங்கி போனது எல்லாம் எப்படியோ சகித்து கொள்ளலாம்..

ஆனால் சற்று முன் நடந்தது????

அதை மட்டும் அவனால் சகித்து கொள்ள முடியவில்லை..

அதை சகித்து கொள்ள முடியாது என்று தெரிந்துதான் போர்க் கொடியை உயர்த்தினான்.. ஆனால் அவரின் ஒரு பார்வைக்கு அவன் மனம் அடங்கி போய் உயர்த்திய கொடி உயர்த்திய வேகத்திலயே கீழ வந்துவிட்டது..

அதன்பிறகு அவனும் மந்திரத்துக்கு கட்டுண்டவன் போல அவர் சொன்னதை செய்தான்..எதிலும் யாருக்கும் கட்டுகடங்காமல்  திமிறி கொண்டு இருப்பவன்,  நினைச்சதை சாதிப்பவன் அவர் விசயத்தில் மட்டும் அவன் நினைத்தது எதையுமே சாதிக்க முடியாமல் போனது..

இத்தனை நாள் போனது போகட்டும்.. எல்லாம் எப்படியோ பொறுத்து கொள்ளலாம்.. ஆனால் அவனுடைய திருமணம்?? அவன் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே வந்து போகும் இனிய தருணம்..

அதைக் கூட அவரே நிர்ணயித்ததுதான் அவனால் சகித்து கொள்ள முடியவில்லை..

தன் திருமணத்தை பற்றி என்னவெல்லாம் கனவு கண்டு கொண்டிருந்தான்.. எப்படி எல்லாம் கற்பனை பண்ணி வைத்திருந்தான்.. அந்த கனவு கோட்டையை கற்பனை உலகத்தை ஒரே நொடியில் தூள் தூளாக்கி விட்டார்...

அவனாலும் அதை மீற முடியாமல் போன தன் இயலாமையை நினைத்து  தான் அவனுக்குள்  சினம் வெகுண்டு எழுந்தது...அவரை துவம்சம் செய்யும் ஆவேசம் உள்ளுக்குள் சுனாமியாய் அடித்து கொண்டிருந்தாலும் அவனால் ஒன்றும் செய்ய முடியாதவாறு போய்விட்டது...

எதிரி வேற எவனோ  ஒருத்தன் என்றிருந்தால் அடுத்த நொடியே தன் எதிரியை  வீழ்த்தி இருந்த இடம் தெரியாமல் ஆக்கி இருப்பான்..

ஆனால் அவன் எதிரி,  அவனுடைய ஆணிவேராக இருந்து விட, தன்னை இந்த உலகத்துக்கு அறிமுக படுத்திய தந்தையின் தந்தையாகி போய்விட அவனால் ஒன்றும் செய்ய முடியாமல் கையை கட்டிபோட்ட கைதியாகி போனான் அந்த நெடியவன்...

ஆனாலும் அவர் முன்னே தோற்றுவிட்ட அந்த ஆத்திரம், தன் கனவு வாழ்க்கையை வளமான மண வாழ்க்கையை நாசமாக்கிய அவரின் மேல் இருந்த ஆத்திரம் எல்லாம்  சுனாமியாய் சுழற்றி அடிக்க அதை எல்லாம் அந்த காரில் காட்டி கொண்டிருந்தான் அந்த கோபக்காரன்.. 

***

இந்த நாவல் ஆடியோ நாவலாக என்னுடைய சேனலில் வெளிவந்துள்ளது. இந்த கதையை ஆடியோ வடிவில் இனிய குரலில் கேட்டு மகிழ, என்னுடைய சேனலை கிளிக் பண்ணுங்க...அப்படியே மறக்காமல் சப்ஸ்க்ரைப் பண்ணுங்க...! அடுத்த அத்தியாயத்தில் விரைவில் சந்திக்கலாம்...நன்றி!!! 

https://www.youtube.com/channel/UCEYI0t-vckRAOhGYxxEf7nQ

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!