உனக்காக நான் இருப்பேன்
உனக்காக நான் இருப்பேன் முன்னுரை: சிறு வயதில் இருந்தே எனக்கு கதை படிக்க ரொம்ப ஆர்வம்.. நிறைய நாவல்கள், சிறுகதைகள் வாசித்திருக்கிறேன்.. அந்த வகையில் புதியதாக எதாவது கதை படிக்கலாம் என்று நெட்டில் தேடிய பொழுது எனக்கு அறிமுகமானதுதான் ChillZee இணையதளம்.. இதில் வெளியாகும் கதைகள் எல்லாம் சுவாரசியமாக இருக்க, அன்றிலிருந்தே ChillZee ன் தீவிர வாசகியாகி போனேன்.. 3 வருடமாக ChillZee ன் வாசகியாக இருந்த நான் இங்கு வெளியாகும் அனைத்து படைப்புகளையும் பார்க்கும்போது எனக்குள் சின்ன ஆர்வம் நானும் ஒரு கதை எழுத வேண்டும் என்று . அந்த ஆர்வத்தில் வந்ததுதான் எனது இந்த முதல் சிறுகதை... ChillZee ன் சிறுகதை போட்டிக்காக நான் முதன் முதலில் எழுத ஆரம்பித்தது... எப்பொழுதுமே முதல் குழந்தை எல்லோருக்கும் ஸ்பெஷல்.. அந்த மாதிரி எனக்கு இந்த கதை ரொம்பவும் ஸ்பெஷல் + பிடித்ததாக்கும்..... உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.. படித்து பாருங்கள்.... *************** பொ ழுது இன்னும் சரியாக புலர்ந்திராத அந்த அதிகாலையில், அந்த திருமண மண்டபம் மாவிலை தோரணங்கலுடனும், அலங...