என் மடியில் பூத்த மலரே-21
அத்தியாயம்-21 சு சிலா எழுதி தந்த மருந்துகளை வாங்கிக்கொண்டு திரும்பி வந்த ஆதி, பாரதி அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தான்.... “ஒரு வேளை நான் பண்ணின டார்ச்சர்ல இனிமேல் தாங்க முடியாது என்று எஸ்கேப் ஆகிட்டாளா ??? அப்ப என் குழந்தை?? “ “சே!! அப்படி எல்லாம் இருக்காது.. அப்படி போறவளா இருந்தா ஸ்கேன் பண்றப்ப குழந்தை எப்படி இருக்கும்னு அப்படி ஏன் பயந்தாள்.. “ என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டான்... ஒரு சில விநாடிகள் அவன் எண்ணங்கள் எங்கெங்கோ சென்று வந்தது.. அவன் முழித்துக்கொண்டு நாலாபக்கம் தேடியபின் மீண்டும் யோசித்துக்கொண்டு நிற்பதைக் கண்ட ஒரு நர்ஸ் அவன் அருகில் வந்து “சார்.. உங்க வைஃப் பை தேடறீங்களா?? “ என்றாள் “வைஃப் ஆ ?? “ என்று முழித்தவன் அவள் பாரதியைத்தான் சொல்றாங்கனு நினைத்து ஆமாம் என்று தலையாட்டினான்.. “ஓ.. உங்க வொய்ப் அந்த பேசன்ட் ரூம்ல இருக்காங்க.. யுவர் வைஃப் இஸ் சோ ஸ்வீட்.. அந்த பையன் கிட்ட மாத்திரை சாப்பிட வைக்க மதியத்தில் இருந்து போராடறேன் நான்.. வாயில்ல போட்ட எப்படியாவது துப்பிடறான்.. ஊசியும் போட்டுக்க மாட்டேங்கறான்.. அவன் போட்ட சத்தத்தை கேட்டு உங்க வைஃப் அங்க வந்...