காதோடுதான் நான் பாடுவேன்-8
அத்தியாயம்-8 ம றுநாள் அதிகாலையில் கண் விழித்த நிகிலன் எதேச்சையாக சோபாவை பார்க்க அவன் கண்ட காட்சியில் அதிர்ந்து நின்றான்... தன் கண்ணை கசக்கி விட்டு மீண்டும் உற்று பார்க்க, அங்கு மது போர்த்தியிருந்த போர்வை விலகி அவள் முகம் மட்டும் வெளியில் தெரிந்தது... அவள் முகத்தை உற்று பார்த்தவன், அவள் தன் வலது கை கட்டை விரலை எடுத்து வாயில் வைத்துக் கொண்டு சூப்பிக் கொண்டே உறங்குவது தெரிந்தது... அதை கண்டதும் அவனுக்கு தன் தங்கை அகிலாவின் நியாபகம் வந்தது.. அவள் இப்படித்தான் எட்டாம் வகுப்பு வரைக்குமே கை விரலை வாய்க்குள் விட்டுக் கொண்டே தான் தூங்குவாள்....அவளை அதட்டி, உருட்டி, மிரட்டி ரொம்ப கஷ்டபட்டுதான் அந்த பழக்கத்தை மறக்க வைக்க முடிந்தது... இவளும் அதே மாதிரி இருக்க, ஒரு நிமிடம் நின்று அவளின் அந்த குழந்தைதனமான முகத்தையும் அவள் விரல் சூப்பி தூங்கும் அழகையும் ரசித்தவன் பின் தன் தலையை உலுக்கி கொண்டே “சே...வர வர இந்த அப்பனுங்க தொல்ல தாங்க முடியல....பொண்ணு பிறந்திட்டா என்னமா வச்சு தாங்கறது... தேவதை, இளவரசி, பிரின்ஸஸ் னு ஓவரா செல்லம் கொடுத்து கொஞ்சி ஒன்னுமே தெரியாம வளர்க்க வேண்டியது... அப்புறம் அ...