காதோடுதான் நான் பாடுவேன்-35
அத்தியாயம்- 35 த ன் பெற்றோர்களுடன் தன் பிறந்த வீட்டிற்கு வந்த மதுவந்தினி தன் பெட்டியை கொண்டு போய் அவள் அறையில் வைக்க, அவளுடைய அறையே புதிதாக இருந்தது அவளுக்கு... இங்குதான் 21 வருடங்களாக வாழ்ந்திருக்கிறாள்.... ஆனால் திருமணம் ஆகி இந்த 6 மாதத்தில் தான் வளர்ந்த தன் அறையே அந்நியமாக தெரியும் அளவுக்கு தன் கணவன் வீட்டாரும் கணவன் மேல் வைத்திருந்த அன்பும் காதலும் அவளை மாற்றியிருந்தது..... ஆனால் என் அன்பை, காதலை அவன் கடைசி வரைக்குமே புரிந்து கொள்ளவில்லையே.... என்னை இன்னுமே நம்பவில்லையே.. என்னை ஒரு நாடகக்காரி, வேசக்காரி என்றுதானே நினைக்கிறான்... “ என்று எண்ணும் பொழுதே அவள் கண்கள் கரித்தன... அதோடு அவன் வீசிய சொற்கள் வேறு அவ்வபொழுது அம்பாக மாறி அவள் இதயத்தைக் குத்தி கிழிக்க, அப்படியே கட்டிலில் படுத்து விட்டாள்... திருமணம் ஆகி இத்தனை நாள் பிறந்த வீட்டை பிரிந்து இருந்த ஏக்கம் எதுவும் இல்லாமல் புகுந்த விட்டில் ஒட்டி கொண்ட தங்கள் மகள் இன்று தானாக விரும்பி இங்கு வரவும் சண்முகத்திற்கும் சாரதாவுக்கும் சந்தோசமாக இருந்தது.. என்னதான் புகுந்த வீடு பிடித்தாலும் அவளுக்கு பிறந்த வீட்டு பாசம் அப்படிய...