தவமின்றி கிடைத்த வரமே-16
அத்தியாயம்-16 த ன் வேலையை முடித்து கீழ இறங்கியவள் லிப்ட்ல் இருந்து வெளி வந்து வரவேற்பறையில் நுழைய, அப்பொழுது தன் அலைபேசியில் வந்த செய்தியை கேட்டதும் அப்பா என்று அலறியவாறு தன் கையில் இருந்த அலைபேசியை நழுவ விட்டாள் பனிமலர்..... இவளின் சத்தத்தை கேட்டு வரவேற்பறையில் அமர்ந்திருந்த கயல் ஓடி வந்து அவளை தாங்கி கொண்டு என்னவென்று கேட்க மலரோ வார்த்தை வராமல் தடுமாறினாள்.... கயல் உடனே கீழ கார்பெட் மீது விழுந்திருந்த மலரின் அலைபேசியை எடுத்து காதில் வைத்து மீண்டும் விவரம் கேட்க, பனிமலரின் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருப்பதாக சொல்லி உடனே அவரை அனுமதித்திருந்த மருத்துவமனையை சொல்லி அவசரமாக வரசொன்னார் மறுமுனையில் இருந்தவர்... அதை கேட்டு கயலும் அதிர்ந்து போனாள்... ஆனாலும் தன்னை சமாளித்து கொண்டு தன் தோழியை கை தாங்களாக அனைத்தவாறு அவளை அழைத்து கொண்டு வெளியில் வர, அங்கு பாஸ்கர் புக் பண்ணியிருந்த கேப் தயாராக இருந்தது.... அதில் பனிமலரை அமர வைத்தவள் தானும் அவள் உடன் அமர்ந்ததும் நேராக அந்த மருத்துவமனையின் பெயரை சொல்லி வேகமாக அங்கு போக சொன்னாள் கயல்... மலரோ அதிர்ச்சியில் இருந்து இன்னும் வெளிவராமல...