என் மடியில் பூத்த மலரே-11
அத்தியாயம்-11 அ ந்த ஆளுயர கண்ணாடி முன் அமர்ந்து தன் இமைகளுக்கு மஸ்காரா போட்டு கொண்டிருந்தாள் ஷ்வேதா.. முடித்ததும் தன் கண்ணை சிமிட்டி பார்த்தாள். அதுவும் அழகாக காட்டியது.. பின் விலை உயர்ந்த அந்த உதட்டு சாயத்தை எடுத்து தடவினாள்.. பின் தன் மேக்கப் முடிந்த திருப்தியுடன் எழுந்து நின்றவள் தன் உடலை இப்படியும் அப்படியும் வளைத்து பார்த்து எப்படி பார்த்தாலும் அழகாக இருக்கவும் முழு திருப்தி வந்தது அவளுக்கு... அதற்குள் “ஷ்வேதா... “என்று நூறாவது முறையாக அழைத்திருந்தார் அவளின் அம்மா... “இதோ வந்திட்டேன் மா ...” என்று திருப்பி குரல் கொடுத்தவள் “இந்த அம்மாக்கு கொஞ்சம் கூட பொறுமயே இல்லை..மேக்கப் போட்டுட்டு வர்ரதுக்குள்ள என்ன அவசரமோ” என்று திட்டி கொண்டெ மீண்டும் ஒருமுறை தன்னை சரி பார்த்து கொண்டு அலட்டிக்காமல் கீழே இறங்கி வந்தாள்... “ஏம்மா .. நான் தான் ரெடியாகிட்டு வர்ரேன் னு சொன்னேன் இல்லை.. அதுக்குள்ள ஏன் கத்திகிட்டிருக்க???” “ஏன்டி.. நான் கத்தறனா??... இதோட நூறு தரம் கூப்பிட்டுட்டேன்.. நீயும் ரெடியாகிட்டேன் ரெடியாகிட்டேனு ஒரு மணி நேரமா சொல்லிகிட்டு தான் இருக்க... முடிஞ்ச மாதி...