Posts

Showing posts with the label காதோடுதான் நான் பாடுவேன்-9

காதோடுதான் நான் பாடுவேன்-9

Image
அத்தியாயம்-9 கௌ தம் ன் அழைப்பை ஏற்ற நிகிலன் தன் அலைபேசியை எடுத்துகொண்டு பால்கனிக்கு சென்றதும் இதுவரை கட்டுபடுத்தி வைத்திருந்த சிரிப்பு வெடிக்க வாய்விட்டு சிரித்தான்..... அவன் சிரிப்பை கேட்டதும் மறுமுனையில் ஒன்றும் புரியாமல் முழித்தான் கௌதம்.... “டேய்.. மச்சான் எதுக்குடா இப்படி சிரிக்கிற?? “ என்றான் ஆர்வமாக மறுமுனையில்... நிகிலன் மீண்டும் சிரிக்க, கொஞ்சம் பொருத்து பின் கடுப்பான கௌதம் “டேய்... சொல்லிட்டு சிரிடா... நானும் கூட சேர்ந்து சிரிப்பேன் இல்ல... நீ பாட்டுக்கு தனியா சிரிச்சா என்ன அர்த்தம்.?? “ என்று திட்டினான்... ஒரு வழியாக அவன் சிரித்து முடித்ததும் “சரியான காமெடி டா ... “ என்றான் இன்னும் சிரித்தவாறு.... அவனின் அந்த வாய் விட்டு சிரித்த சிரிப்பை ரசித்த கௌதம், “அப்படி என்ன காமெடிடா பார்த்த?? எந்த சேனல் னு சொல்லு.. நானும் பார்க்கறேன்... “ என்றான் கௌதம் ஆர்வமாக... “ஹ்ம்ம்ம் இது எந்த சேனலிலும் வராத காமெடி...”என்று மீண்டும் சிரித்தான் நிகிலன்... “டேய் மச்சான்.. நிஜமாகவே உன் வீடு தேடி வந்து அடிப்பேன்.. கடுப்பேத்தாம என்ன நடந்தது?? எதுக்கு சிரிக்கிற னு சொல்லு.. “ என்றான் எரிச்சலுடன்.....

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!

தாழம்பூவே வாசம் வீசு!!!