என் மடியில் பூத்த மலரே-34
அத்தியாயம்-34 பத்தாவது மாதம்: அ ன்று காலை விடியும் பொழுதே ஜானகியின் இல்லத்தில் இருந்த அனைவர் முகத்திலும் ஒரு வித பரபரப்பு இருந்தது....அன்று பாரதிக்கு டெலிவரிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்...ஏதோ ஒரு காரணத்தை சொல்லி பாரதிக்கு சிசேரியன் என்று சொல்லவும் தர்மலிங்கமும் லட்சுமியும் இன்று காலையில் விமானத்தில் வந்துவிட்டனர்... சுசிலா அவருக்கு இன்னோரு ஆபரேசன் இருக்க, முன்னரே கிளம்பி சென்றிருக்க, மற்ற அனைவரும் மருத்துவமனைக்கு செல்ல தயாராகினர்... வீட்டில் இருந்த பூஜை அறையில் அந்த முருகனை வணங்கி பின் கிளம்பினர்.. ஆதியே காரை ஓட்ட, பாரதி அவன் அருகில் அமர, மற்றவர்கள் பின்னால் அமர்ந்தனர்.. கார் கொஞ்ச தூரம் சென்றதும் பாரதிக்கு ஒரு வித பயம் மற்றும் பதட்டமாக இருந்தது... ஆதியையே ஏக்கமாக பார்த்து வந்தாள்....அவன் எதுவும் ஆறுதலாக சொல்லுவான் என்று நினைத்து.. ஆனால் அவனோ இவள் பக்கமே திரும்பவில்லை.. சாலையையே நேராக பார்த்து காரை ஓட்டி கொண்டிருந்தான்... கொஞ்ச நேரம் அவன் முகத்தையே ஏக்கமாக பார்த்தவள் பின் வெளியில் வேடிக்கை பார்த்து வந்தாள்... மனதுக்குள் கந்த சஷ்டி கவசத்தை சொல்லிக் கொண்டாள்... ஆதிக்கும் அ...