அழகான ராட்சசியே!!-38(final)
அத்தியாயம்-3 8 அ ன்று இரவு பெரியவர்கள் அனைவரும் தோட்டத்தில் அமர்ந்து கதை பேசி கொண்டிருக்க , சந்தியாவை சிவகாமியின் அறையில் அமர வைத்து அவளை முதலிரவுக்காக அலங்கரித்து கொண்டிருந்தாள் மது... சந்தியாவிற்கு உள்ளே படபடப்பாக இருந்தது.. என்னதான் தைரியமானவளாக இருந்தாலும் வாய் ஓயாமல் அடுத்தவர்களை வம்பு இழுத்து மிரட்டினாலும் பெண்மைக்கே உரித்தான நாணம் அவளை சூழ்ந்து கொள்ள வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன.. அதுவும் சற்று முன்னே இரவு உணவின் பொழுது எல்லோரும் கலகலப்பாக அமர்ந்து பேசியவாறு சாப்பிட்டுக் கொண்டிருக்க , மகிழன் நொடிக்கொரு தரம் அவளை விழுங்கி விடுவதை போல பார்த்துக் கொண்டிருந்தான்.. மற்றவர்களிடம் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தாலும் தன் கணவனின் பார்வையை சந்திக்கும் பொழுதெல்லாம் அவள் வயிற்றுக்குள் படபடக்க ஆரம்பித்தது.. அதை இப்பொழுது நினைக்கும் பொழுதும் ஏதோ ஒரு இனம் புரியாத , பயமும் இல்லாமல் மகிழ்ச்சியும் இல்லாத ஒரு உணர்வு அவளை ஆட்கொண்டது... உடனே தன்னை சீண்டியவாறே அலங்கரித்துக் கொண்டிருந்த மதுவை பார்த...