காதோடுதான் நான் பாடுவேன்-6
அத்தியாயம்-6 ஒ ரு வழியாக தனக்கு வேண்டிய விவரங்களை கேட்டு குறித்து கொண்டதும் அந்த பயிற்சி மையத்தில் இருந்து வெளியில் வந்தவள் லிப்ட் வழியாக மீண்டும் கீழ வந்து அந்த ஆட்டோ இறக்கி விட்ட இடத்திற்கு வந்து நின்று கொண்டாள் .. “அப்பாடா... ஒரு வழியா Stage 2 ம் completed… அடுத்து Last and final stage திரும்ப வீட்டிற்கு போவது... இப்ப எப்படி இங்கிருந்து வீட்டிற்கு போவது ?? “ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.. பசி வேறு வயிற்றை கிள்ள ஏதாவது சாப்பிடலாம் என்று சுற்றிலும் பார்த்தவள் அங்கு எதிர்பக்கம் புட்கோர்ட் இருப்பதை கண்டாள்... ஆண்களும் பெண்களும் கும்பல் கும்பலாக நின்று சிரித்து பேசி கொண்டே சாப்பிட்டு கொண்டிருக்க எல்லா கவுண்டர் லயும் வரிசையில் நிக்க,அதில் தான் மட்டும் தனியாக எப்படி போவது என்று பயந்து தன் எண்ணத்தை கை விட்டாள்... “நேரா வீட்டிற்கே போய்டலாம்..” என்றவள் தன் அலைபேசியை எடுத்து ஆட்டோ புக் பண்ணுவதற்கான ஆப் ஐ ஒபன் பண்ண அந்த நேரம் பார்த்து அவள் நெட் வேலை செய்ய மறுத்தது... “ஐயோ!! இப்ப எப்படி ஆட்டோ புக் பண்ணுவது?? அகிலா வேற சாதாரண ஆட்டோல வரக்கூடாது னு சொன்னாளே.. “ என்று மீண்டும் பயந்தாள்.......