பூங்கதவே தாழ் திறவாய்-36(Final)
இதழ்-36 ஒ ரு வாரத்திற்கு பிறகு நந்தன் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்திருந்தான்... இந்த ஒரு வாரமும் தீக்சா அவனை விட்டு அகலாமல் அவன் பக்கத்தில் இருந்து அவனை கவனித்து கொண்டாள்... பரிமளம் தான் தன் பேத்தியை முழு நேரமும் கவனித்து கொண்டார்.. அவள் பால் குடிக்கும் நேரம் மட்டும் அதுவும் அவரே தீக்சாவிற்கு நினைவு படுத்தி அவளை பால் ஊட்ட வைத்து பின் தூக்கி கொண்டு சென்று விடுவார்... என்னதான் அவன் அருகில் இருந்தே அவனை கவனித்து கொண்டாளும் , அவன் வாய் திறந்து அவளிடம் எதுவும் பேசவில்லை.. இவளோ ஒரு ஆயிரம் முறையாவது சாரி சொல்லி இருப்பாள்.. ஆனால் அவனோ அதை எதுவும் கண்டு கொள்ளவில்லை.. அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை... அதே வெறித்த பார்வைதான்... அதை கண்டு இன்னும் கலங்கி போனாள்.. ஆனாலும் தன்னை தேற்றி கொண்டு அவனை விட்டு பிரிய மனம் இல்லாமல் அவனுடனே தங்கி விட்டாள்... ஒ ரு வாரத்திற்கு பிறகு தலையில் கட்டெல்லாம் பிரித்து அவன் எப்பவும் போல எல்லா வேலையும் செய்யலாம்.. ஆனாலும் ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ண வேண்டாம்.. “ என்று சொல்லி அவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.... ...