காதோடுதான் நான் பாடுவேன்-38
அத்தியாயம்-38 ஏழாவது மாதம்: கா ல சக்கரம் வேகமாக சுற்ற, மதுவந்தினிக்கு ஏழாவது மாதம் ஆரம்பித்து இருந்தது... தன் மருமகளின் கற்பம் உறுதியான அடுத்த நாள் தன் மகன் நடத்திய கூத்தை கண்டு பயந்தவர் அவன் என்னதான் சத்தியம் செய்திருந்தாலும் அந்த கிறுக்கன் எப்ப மனசு மாறி ஏதாவது செய்து விட்டால் என்று அஞ்சி தன் மருமகளை அவன் அறைக்கு அனுப்பாமல் தன்னுடனே வைத்து கொண்டார் சிவகாமி.... அவன் வீட்டில் இருக்கும் நேரங்களில் அவளை தனியாக விடாமல் தன்னுடனே இருக்க வைத்து கொண்டார்... அவனுமே தன் அன்னையின் வேதனையை புரிந்து கொண்டு அதன் பிறகு மதுவை எதுவும் வருத்தாமல் விலகி இருந்தான்... ஆனால் தன் எண்ணத்தில் இருந்து மட்டும் மாறவேயில்லை... மது அடுத்த இரண்டு மாதத்திற்கு ட்ராவல் பண்ண வேண்டாம் என டாக்டர் சொல்லி இருக்க, IAS பயிற்சி வகுப்பிற்கு போக வேண்டாம் என்று சொல்லிவிட்டார் சிவகாமி... மதுவும் ஜெயந்த் ஐ அழைத்து விவரம் சொல்லி அவள் வகுப்பிற்கு வரமுடியாது என சொல்ல, அவனும் மது உண்டாகியிருக்கும் செய்தி கேட்டு அவளை வாழ்த்தி வீட்டில் இருந்தே படிக்க சொன்னான்... இந்த வருடம் பரிட்சை எழுத முடியாவிட்டாலும் வீட்டில் இருந...