காதோடுதான் நான் பாடுவேன்-21
அத்தியாயம்-21 பெ ரியவன் போலிஸ் வேலைக்கு போகவும் கௌதம் பயலும் அந்த வேலைக்குத்தான் போவேனு அவனும் ஏதோ படிச்சு இன்ஸ்பெக்டர் ஆய்ட்டான்.. வேலைக்கு சேர்ந்த ஒரு இரண்டு வருடம் நிகிலன் நல்லாதான் இருந்தான்.. எல்லார்கிட்டயும் மகிழன் மாதிரி நல்லா கலகலனு பேசாட்டியும் ஓரளவுக்கு நல்லாதான் பேசுவான்.. ஆனா அதுக்கப்புறம் என்னாச்சோ கொஞ்சம் கொஞ்சமா பேச்சு கொறஞ்சு போச்சு.. எப்ப பார் விரைத்த மாதிரியே இருக்க ஆரம்பித்தான்.. எனக்கு அப்ப ஒன்னும் சரியா தெரியல.. போலிஸ் வேலைக்கு போனதால எல்லா ரவுடிங்களையும் பார்த்து இப்படி ஆய்ட்டானோனு இருந்தேன்.. இந்த நிலையில கௌதம் யாரோ ஒரு பொண்ண லவ் பண்றானு அவன் அம்மாகிட்ட வந்து நின்னான்... என்னதான் வயித்துல பிறக்கலைனாலும் ரமணிக்கு நிகிலன் தான் மூத்த பையன் மாதிரி.. அவனுக்கு முதல்ல கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் கௌதம் க்கு பண்ணலாம்னு ரமணி என்கிட்ட சொன்னா.. எனக்கு அப்பதான் உரைச்சது என் பையன் கல்யாணம் பண்ற அளவுக்கு அவ்வளவு பெரிய ஆளாயிட்டானா?? னு அப்ப அவனுக்கு 26 வயசு நடந்துகிட்டிருந்தது... நானும் பெரியவன்கிட்ட கல்யாண பேச்ச ஆரம்பிச்சேன்.. அவன் உடனே இப்ப எனக்கு கல்யாணம் வேண்டா...