காதோடுதான் நான் பாடுவேன்-27
அத்தியாயம்-27 ஒ ரு வழியாக கௌதம் வீட்டை அடையவும் கௌதம் வாசலுக்கே வந்து அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்றான்.... உள்ளே சென்றதும் நிகிலன் அந்த வீட்டை சுற்றிலும் பார்வையிட்டான்... அவனுக்கு பழைய ஞாபகம் எல்லாம் வந்தது.. இந்த வீட்டை ரமணியும் மூர்த்தியும் தங்கள் மகனுக்காக ஆசையாக கட்டியது... நிகிலன் எப்பொழுதும் இங்கயேதான் இருப்பான்.. இந்த வீட்டின் ஒவ்வொரு மூலையும் அவன் அறிந்ததே.. அரண்மனை மாதிரி இருக்கும் இந்த வீட்டில் ராணி மாதிரி வாழ்ந்த ரமணி இந்த வீட்டை விட்டு அனாதை மாதிரி வந்து அங்க இருக்காங்களே.. எல்லாம் அந்த பிசாசால்.. “ என்று திட்டிக் கொண்டிருக்கையிலையே அங்கு இருந்த ஒரு அறையின் உள்ளே இருந்து தன் அலங்காரத்தை முடித்து வெளியில் வந்தாள் வசந்தி.... வெள்ளை வெளேரென்று பார்ப்பவர்கள திரும்பி பார்க்க வைத்து சுண்டி இழுக்கும் நிறத்தில் இருந்தாள்... முகத்தில் ஒரு அலட்டலும் கண்ணில் ஒரு அலட்சியம், யாரையும் துச்சமாக மதிக்கும் ஒரு பார்வையும் நடையில் யாரையும் மதிக்காத ஒரு திமிரும், மொத்தத்தில் அவள் தோற்றத்தில் பணக்கார வாடை வீசியது... இந்த சின்ன விருந்துக்கே தன்னை முழு சிரத்தை எடுத்து அலங்கரித்து...