காதோடுதான் நான் பாடுவேன்-17
அத்தியாயம்-17 ஒ வ்வொருவரும் அவரவர் வேலையில் பிசியாக இருக்க காலமும் அதன் கடமையில் பிசியாகி செவ்வனே அதன் பணியை செய்ய நாட்கள் விரைந்தோடி சென்றது... மதுவந்தினியின் திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள் ஓடியிருந்தது அதற்குள்.. இந்த ஐந்து மாதங்களில் தன் சிறுபிள்ளை குணத்தில் இருந்து ஓரளவுக்கு வளர்ந்து தெளிவாகியிருந்தாள் மது... தனக்கு திருமணம் ஆனதும் மாமியார் நாத்தனார் என்ற புது உறவுகளை ஏற்று அவர்களுக்கு பிடித்தவளாக வளைய வருவதும் புது விதமாக இருந்தது... அதை எல்லாத்தையும் விட சமீபமாக அவள் உள்ளே புதிதாக முளைத்திருந்த காதல் இன்னும் சுகமாக இருந்தது அவளுக்கு... அதுவும் தாலி கட்டி தன்னை மணந்த கணவன் மீது வந்துள்ள காதல்.... எல்லாரும் காதலித்து பின் கை பிடிக்க, இவள் வாழ்வில் கை பிடித்து முழு உரிமையும் பெற்ற பின் வந்துள்ள காதல்.... ஆனால் அதை உரியவனிடம் தான் வாய்விட்டு சொல்ல முடியவில்லை அவளால்... காதல் முளைத்த நாளிலிருந்தே அவனை ரகசியமாக பார்க்க மட்டுமே முடிகிறதே தவிர, அவனை இன்னும் நேருக்கு நேராக பார்க்க, அவனை பார்த்து நாலு வார்த்தை பேச தந்தி அடிக்கிறது அவளுள்ளே... அவனாவது ஏதாவது ஆசையாக பேசுவான் என்ற...