என் மடியில் பூத்த மலரே-30
அத்தியாயம்-30 ஏழாவது மாதம்: அப்படியே லெப்ட் ல போய், அப்புறம் ரைட் ல போய் மறுபடியும் லெப்ட் ல போனா ஒரு ரோடு வரும்... அதை எடுத்தா எங்க ஊருக்கு போய்டலாம்.. “ என்று தன் அலைபேசியில் கத்திக் கொண்டிருந்தாள் பாரதி... “ஏய்... கத்தாதடி... எனக்கு காது நல்லா கேட்கும்... மெதுவா பேசித்தொலை... இந்த GPS லயே கண்டுபிடிக்க முடியாத ஊர் உங்க ஊர் தான்..அதுல வராதனால லெட் ,ரைட்,லெப்ட் னு இந்த மார்ச் பாஸ்ல சொல்ற மாதிரி நீ சொல்றதை எல்லாம் நான் பாலோ பண்ண வேண்டியிருக்கு... “ என்று கிண்டலடித்து கொண்டே காரை இலாவகமாக ஓட்டிகொண்டிருந்தான் ஆதி... அருகில் ஜானகி அமர்ந்து அவர்களின் சண்டையை ரசித்தவாறு சுற்றிலும் வேடிக்கை பார்த்து வந்தார்... “ஐய.. GPS வரதுக்கு முன்னாடி எல்லாரும் எப்படி வழி கண்டு பிடிச்சாங்களாம்?? எல்லாம் வாயால எந்த ஊருக்கு வேணும்னாலும் வழி கேட்டு போனதில்லை... இப்பதான் இந்த GPS வந்ததுக்கப்புறம் பக்கத்து தெருவுக்கு போறதுன்னா கூட இந்த GPS ஐ போட்டுக்கறாங்க.. இன்னும் கொஞ்ச நாள் போனா பக்கத்து வீட்டு அட்ரஷை கண்டுபிடிக்கறதுக்கு கூட அததான் கேட்க வேண்டி இருக்கும் போல... “ என்று கழுத்தை நொடித்தாள் பாரதி....