Posts

Showing posts with the label காதோடுதான் நான் பாடுவேன்-5

காதோடுதான் நான் பாடுவேன்-5

Image
அத்தியாயம்-5  ஏ தோ ஒரு வேகத்தில் தைரியமாக தனியாக போறேன் என்று சொல்லி கிளம்பி வந்துவிட்டாலும் ஆட்டோ சிறிது தூரம் சென்றதுமே உள்ளுக்குள் உதற ஆரம்பித்தது மதுவந்தினிக்கு... சுற்றிலும் பார்வையை சுழல விட்டவளுக்கு அந்த இடமே புதியதாக இருந்தது.. அது ஒரு VIP க்கள் வசிக்கும் இடம் போல இருந்தது.. இந்த மாதிரி இடத்துக்கு முன்னாடி வந்ததில்லை... அதோடு மூன்று நாள் முன்பு திருமணம் முடித்து இதே வழியாக வந்திருந்த போதும் மது தலை குனிந்த படியே வந்ததால் இதை எல்லாம் கவனித்திருக்கவில்லை... அன்று வீட்டிற்குள் போனவள் தான்... அதன் பிறகு இன்றுதான் வீட்டின் வாயிலை தாண்டி வருகிறாள்.. அதுவும் முதல் முறை வெளியில் செல்லும் பொழுது இப்படி தனியா போக வேண்டி ஆயிருச்சே என்று மனதுக்குள் சுணங்கியது.. வெளியில் பார்த்தவள் எதேச்சையாக முன்புறம் பார்க்க, அங்கு இருந்த கண்ணாடியில் முன்புறம் இருந்த ஆட்டோ டிரைவர் அவளையே உற்று பார்ப்பதை போல இருந்தது... உடனே அவள் இதுவரை ஆட்டோ டிரைவர் பற்றி படித்த, கேட்ட செய்திகள் எல்லாம் நினைவு வர, திக் என்றது அவளுக்கு.. அவசரமாக அகிலா சொல்லி கொடுத்த சேப்டி டிப்ஸ் ஐ மனதுக்குள் ஓட்டி பார்த்தாள்....

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!

தாழம்பூவே வாசம் வீசு!!!