தவமின்றி கிடைத்த வரமே-19
அத்தியாயம்-19 மி த்ரா மல்ட்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் அன்று பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.... ஒவ்வொரு பிரிவிலுமே நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது..அதுவும் கைனிக் பிரிவில் சொல்லவே வேண்டாம்.... கைனிக் பிரிவில் மட்டும் மூன்று பிரபல கைனிக் மருத்துவர்கள் வெவ்வேறு அறைகளில் அன்று வந்திருந்த பேசன்ட்ஸ்களை பரிசோதித்து கொண்டிருந்தனர்... ஒவ்வொரு அறையிலுமே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது....அதுவும் மித்ரா வின் அறையில் கூட்டம் இன்னும் அதிகம்... கைனிக் பிரிவில் புகழ்பெற்ற முன்னனி மருத்துவர்களில் மித்ராவும் ஒன்று.. ஆரம்பத்தில் இந்த துறையில் விருப்பம் இல்லாமல் தான் இருந்தாள்.... MBBS முடித்ததுமே மேல படிக்க விருப்பம் இல்லாமல் தான் இருந்தாள்... ஆனால் வசி MD படிக்கவும் தானும் அதே படிக்க வேண்டும் என தோன்ற அதில் சேர்ந்தாள்.. என்ன ஸ்பெஷலைசேசன் பண்ணுவது என்று யோசிக்க, வசிதான் கைனிக் பிரிவை அவளுக்கு சஜஸ்ட் பண்ணி அவளுக்காக அப்ளிகேசனும் போட்டு வைத்தான்... ஆரம்பத்தில் விருப்பம் இல்லாமல் சென்று வந்தவளுக்கு வசி அந்த துறையை பற்றி அடிக்கடி புகழ்ந்து பேசி அவளை மோட்டிவேட் பண்ண, அவளுக்கும் கொஞ்ச...