காதோடுதான் நான் பாடுவேன்-24
அத்தியாயம்-24 அ டுத்து வந்த இரண்டு வாரங்களும் இறக்கை கட்டி பறந்தனர் இரு வீட்டிலும்.. அதுவும் சிவகாமிக்கு கால் தரையில் இல்லை.. தனக்கு மருமகள் வரப்போகிற சந்தோசத்தில் மனம் எல்லாம் பூரிப்புடன் திருமண வேலைகளை செய்து வந்தார்.... வீட்டை கட்டிப்பார்... கல்யாணத்தை பண்ணிப் பார் என்று அந்த காலத்தில் சொல்லுவார்கள்... வேலைகளில் கடினமானது வீடு கட்டுவதும் திருமணத்தை நடத்துவதும் தான் என்ற அர்த்தத்தில்.... வீடு கட்ட வேண்டும் என்றால் அதற்கு தேவையான மணல், கம்பி, சல்லி, மரச்சாமான்கள் என்று ஒவ்வொன்றுக்கும் அலைந்து திரிந்து வாங்க வேண்டும்... அதைப் போலவே ஒரு திருமணத்தை நடத்த வேண்டும் என்றால் மண்டபம் பார்க்க, பத்திரிக்கை அடிக்க,சமையல் ஆள், மண மேடை அலங்காரம், ஐயர் ,நாதஸ்வரம், தவில் வாசிப்பவர் என்று பலபேரை பிடிக்க வேண்டும்... இரண்டுக்குமே அலைச்சல் அதிகம் என்பதால் அப்படி சொல்வது,.. ஆனால் இன்றைய தலைமுறையில் இரண்டையுமே outsource பண்ணி விடுகிறார்கள்... வீடு கட்ட வேண்டுமா?? பிளானை மட்டும் ஒரு எஞ்சினியர் வைத்து தயாரித்ததும் அதை அப்படியே கொண்டு போய் வீடு கட்டி தரும் கான்ட்ராக்டரிடமோ அதற்கான கம்பெனியிடமோ விட்டு...