என் மடியில் பூத்த மலரே-1
அத்தியாயம்-1 “மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்! நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்…” என்ற ஆண்டாள் திருப்பாவை இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தது அந்த கிராமத்தில். அது ஒரு காவிரி நதிக்கரையில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமம். காவிரி நீர் வாய்க்கால் வழியாக நேரடியாக அந்த ஊருக்கு வரும். எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று மின்னும் நெற்பயிர்களும், குலை குலையாக காய்த்து குழுங்கும் வாழை தோட்டங்களும், சாலையின் இரு புறமும் நன்கு உயர்ந்த தென்னை மரங்கலும் சூழ்ந்து ரம்யமாக இருக்கும் அந்த கிராமம் ஒரு காலத்தில்.... இன்று காவிரியில் நீர்வரத்து இல்லாததால் விவசாயமே தேய்ந்து போனது. எங்கயாவது ஒரு சில இடங்களில் மட்டும் சிலர் ஆழ்துளை கிணற்றின் மூலம் கொஞ்சமாக விவசாயம் செய்து வந்தனர்.. பாதி பேர் வேலை தேடி நகரத்திற்கு இடம் பெயர ஆரம்ப...