காதோடுதான் நான் பாடுவேன்-4
அத்தியாயம்-4 “ எ னக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லை..” என்று தன் மருமகள் சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து அமர்ந்தார் சிவகாமி.... அவரின் அதிர்ந்த முகத்தை கண்ட மது பதறி “ஐயோ!! அத்தை.. நீங்க பாட்டுக்கு நான் வேற யாரையாவது காதலிக்கறதாகவோ இல்ல வேற ஏதாவது கற்பனை பண்ணிக்காதிங்க... எனக்கு ஏன் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லைனா??... எனக்கு இன்னும் நிறைய படிக்கணும் னு ஆசை அத்தை... அதான்....” என்றாள் தயங்கியவாறு... அதை கேட்டு நிம்மதி அடைந்த சிவகாமி “அப்பாடா... அவ்வளவு தான மது... நான் கூட இங்க ஏற்கனவே இருக்கிற பிரச்சனை பத்தாதுனு நீ வேற என்ன புதுசா சொல்ல போறியோனு கொஞ்ச நேரத்துல பயந்து போய்ட்டேன்... படிக்கறது தான.. நீ தாராளமா படி... ஆமா உனக்கு என்ன படிக்கணும்?? “ என்றார் சிரித்தவாறு... “ஹ்ம்ம்ம் எனக்கு சின்ன வயசுல இருந்தே IAS எக்ஷாம் எழுதி கலெக்டர் ஆகனும் னு ஒரு கனவு அத்தை... நான் இரண்டாம் கிளாஸ் படிக்கிறப்போ எங்க ஸ்கூலுக்கு ஒரு லேடி கலெக்டர் வந்தாங்க.. நல்ல உயரமா, ஸ்டைலா கொண்டை போட்டு கிட்டு அவ்வளவு கம்பீரமா ஜீப்பில வந்து இறங்கினாங்க... எங்கஸ்கூல் ஹெச் எம் எப்பவும் சிடுசிடு னு எ...