என் மடியில் பூத்த மலரே-19
அத்தியாயம்-19 அ திகாலை கடற்காற்று சில்லென்று வீசிக்கொண்டிருக்க, அந்த இளங்காலை கதிரவனின் ஒளி அந்த ஜன்னலின் வழியே பாய்ந்து வந்து அவனின் கன்னத்தை முத்தமிட்டது...அந்த முத்தம் அவனின் குட்டி தேவதையின் முத்தத்தை போல இனிக்க அதை ரசித்தவாறு போர்வையை இன்னும் இழுத்து போர்த்திக் கொண்டு தூங்கினான் ஆதி... “ம்ஹ்ஹும்.. இவன் எழுந்திருக்க மாட்டான் போல.. இவனை எப்படி எழுப்பவது” என்று யோசித்த அந்த ஆதவன் அவனின் கன்னத்தில் பளீரென்று பாய்ந்தான்.. அதையும் அந்த குட்டி பிரின்ஸஸ் அவன் கன்னத்தை தன் பல் இல்லாத பொக்கை வாயில் கடித்ததை போல இருக்க செல்லமாக “ஆ” வென்று அலறியவாறு எழுந்தான் அந்த குட்டி தேவதையை பிடித்து கட்டிக்கொள்ள..... வேகமாக எழுந்தவன் சுற்றிலும் கண்களால் தேடினான் அவன் தேவதையை காண...அவளைக் காணவில்லை... அதோடு அந்த இடம் வேற புதியதாக இருக்க நான் எங்க இருக்கிறேன் என்று தன் தலையை தட்டி மீண்டும் யோசித்தான்.. அப்பொழுதுதான் நினைவு வந்தது அவன் கெஸ்ட் ஹவுசில் இருப்பது... அதை தொடர்ந்து நேற்று இரவு நடந்த சம்பவங்கள் நினைவு வந்தன...அவசரமாக மணியை பார்த்தான்.. அது 7.30 என்று காட்டியது... “ஐயோ!! எப்படி இவ்வளவு நேர...