தவமின்றி கிடைத்த வரமே-8
அத்தியாயம்-8 ம று நாள் அதிகாலை எழுந்து தன் காலை ஓட்டத்தை முடித்து சிக்கிரம் வீடு திரும்பினான் வசீகரன். வேகமாக கிளம்பி அதே அவசரத்தில் காலை உணவை வேகமாக உண்டு பின் தன் அன்னையிடம் விடைபெற்று அவசரமாக கிளம்பி சென்றான்.. அன்று கீர்த்தியை RJS hospital க்கு மாற்ற எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்தான் வசி... அதன்படி கிளம்பி கீர்த்தி தங்கியிருந்த அந்த மருத்துவமனைக்கு சென்றான்... அங்கு பனிமலர் முன்னதாகவே வந்து அவனுக்காக காத்திருந்தாள்... காலையிலயே தலைக்கு குளித்து தன் கூந்தலின் ஈரம் இன்னும் காயாததால் பிரியாக விரித்து விட்டு இரண்டு பக்கமும் முடி எடுத்து நடுவில் ஒரு கிளிப் ஐ போட்டிருந்தாள்... கோயிலுக்கு சென்று வந்ததன் அடையாளமாக அவள் நெற்றியில் வைத்திருந்த சின்ன ஸ்டிக்கர் பொட்டுக்கு மேல கீற்றாக திருநீற்றை வைத்திருந்தாள்... கூந்தலில் சிறு மல்லிகை சரத்தையும் வைத்திருக்க, வசியை கண்டதும் புன்னகைத்தவாறு அவன் அருகில் வந்தாள்.... அவளின் பளிச்சென்ற முகம் அவனுக்கு பனியில் நனைந்த ரோஜாவை நினைவு படுத்த அவளின் குண்டு கன்னத்தை தொட்டு பார்க்க துடித்த தன் கைகளை அடக்கி கொண்டு அவனும் புன்னகைத்தான் அவளை பார்த்...