தவமின்றி கிடைத்த வரமே-41
அத்தியாயம்-41 அ மைதியாக சந்தோஷமாக சென்று கொண்டிருந்த பனிமலரின் திருமண வாழ்வில் குழப்பத்தை கொண்டு வந்த மித்ரா வை பற்றி மேலும் தெரிந்து கொள்ள, ஷ்யாமை சந்திக்க சொல்லி இருந்தாள் பாரதி.. ஷ்யாம் வேலை செய்யும் மித்ரா மருத்துவமனையின் அருகில் இருந்த காஃபி ஷாப் ல் சந்திக்கலாம் என ஷ்யாம் சொல்ல, மலரும் அடுத்த அரை மணி நேரத்தில் அங்கு சென்றிருந்தாள்.. தன் வண்டியை பார்க்கிங் ல் நிறுத்திவிட்டு உள்ளே செல்ல, அது அந்த காஃபி ஷாப் அவர்கள் திருமணத்திற்கு முன்பு வசி மலருடன் அடிக்கடி சந்தித்து பேசும் இடம்தான்.. அந்த காஃபி ஷாப் உள்ளே நுழைந்த மலரின் கால்கள் தானாக அவர்கள் வழக்கமாக அமரும் இடத்திற்கு சென்றது.. அந்த இருக்கையில் அமர்ந்ததும் அவளுக்கு பழைய நினைவுகள் எல்லாம் கண் முன்னே வந்தன.. அவன்தான் தன் கணவனாக வரப்போகிறான் என்று அறியாமல் என்னவெல்லாம் சொல்லி அவனை ஓட்டி இருக்கிறாள்.. அவனுமே அவளின் வம்பு பேச்சுக்கு சிரித்து கொண்டே சமாளித்தானே.. அந்த குறும்பு பார்வையின், வசீகர சிரிப்பின் அர்த்தம் அப்பொழுது புரியவில்லை.. வசீகரன் மலரை காதலித்துதான் மணந்தான் என்று பாரதி சொன்னதை கேட்டதில் இருந்தே மலருக்கு ...