Posts

Showing posts from January, 2021

காந்தமடி நான் உனக்கு !!-3

Image
  அத்தியாயம்-3   அ ந்த பொடியன் காட்டிய தினசரியில் இருந்த புகைப்படத்தில் காந்தமாய் புன்னகைத்துக் கொண்டிருந்தவனை பார்த்ததும் அதிர்ந்து போனாள் சத்யா. அவன் அச்சு அசலாய் அவளவன் அமுதனைப் போலவே இருந்தான். ஆனால் அவனின் உடை அலங்காரம் , முகத்தில் தெரிந்த தேஜஸ் , உடல் மொழியில் தெரிந்த பணக்கார கலை மற்றும் அவன்   கண்களில் தெரிந்த அலட்சியம் கண்டிப்பாக அவன் அமுதன் இல்லை என்று எடுத்துக் காட்டியது. ஆனாலும் அவள் மனமோ அதை ஒத்துக்கொள்ள மறுத்தது. ஏனென்றால் அவன் முகம் பார்ப்பதற்கு அச்சு அசலாய் அப்படியே அவளவனை போலத்தான் இருந்தான்.   அந்த புகைப்படத்தில் லேசாக புன்னகைத்து இருக்க ,   அதில்   கொஞ்சமாய் தெரிந்த அந்த தெத்துப்பல்...அதுதான் அவனுடைய ஹைலைட்டே. அவன் சிரிக்கும்பொழுது அந்த தெத்துபல் இன்னும் எடுப்பாய் தெரிய , அப்படியே அவன் புன்னகை அவளை காந்தமாய் வசீகரிக்கும்.. அந்த பல் அப்படியே இவனிடமும் ஒத்துப் போனது.   அதைவிட அவனின் கம்பீரமான மீசை ,   கன்னத்தில் விழும் அழகான குழி , அதைவிட அவள் அடிக்கடி தொட்டுப் பார்த்து ரசித்த   அவன் இதழ்களுக்கு சற்று மேலே இருந்து அந்த பெரிய மச்சம்...   இதெல்லா

காந்தமடி நான் உனக்கு !!-2

Image
  அத்தியாயம்- 2 ச த்யா !!! அப்பர் மிடில் கிளாஸ் ம் இல்லாமல் லோயர் மிடில் கிளாஸ் ம் இல்லாமல் இடையில் சிக்கி கொண்டு மிதிபடும் மத்தியதர குடும்பத்தை சேர்ந்தவள். அவள் தந்தை ராஜன் ஒரு கார்மெண்ட் ஃபேக்டரி ல் சேல்ஸ் மேனேஜராக பணிபுரிந்தார்...அவள் அன்னை வளர்மதி. முப்பெரும் தேவியர்களை போல மூன்று முத்தான இளவரசிகளை பெற்று எடுத்தவர். வாய் பேசா மடந்தை... தன் கணவன் , மூன்று மகள்களும் , சமையல்கட்டும் மீதி நேரத்தில் தன் ஆருயிர் தோழியாய் அவர் உடன் எப்பொழுதும் ஒட்டி கொண்டிருக்கும் தையல் மெசின் என ஒரு சலிப்பான வாழ்க்கையையும் சலிப்பு தட்டாமல் ரசித்து வாழ்பவர். சத்யாவின் தந்தை தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்! அவளுடைய மூதாதையர் தமிழ்நாட்டில் வேலூர் பக்கத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள். அவளுடைய தாத்தா காலத்தில் பிழைப்பிற்காக பெங்களூர் வந்தவர்கள் இங்கேயே தங்கிவிட அவள் தந்தை பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூரில் தான். ஆனால் அவள் தந்தைக்கு பெண் தேடும் பொழுது அவர்கள் உறவினர்களின் தூரத்து சொந்தமான ,   வேலூரில் பிறந்து வளர்ந்திருந்த வளர்மதியை மணம்   முடித்தனர் வளர்மதியும் ஆரம்பத்தில் புது இடம் ,

காந்தமடி நான் உனக்கு !!-1

Image
  அத்தியாயம்- 1 பெ ங்களூர் !!! மனதை மயக்கும் அந்தி மாலை நேரம் அது! தன்னுடைய அன்றைய கடமை முடிந்ததென திருப்தியில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்தான் ஆதவன். மாலை நேரம் மணி ஆறை   தொட்டிருக்க   அதுவரை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த கார்மென்ட் தொழிற்சாலை வேலை முடிந்ததற்கான அறிகுறியாய் சங்கை ஊதி அலறிக் கொண்டிருந்தது.   அதுவரை கடுப்புடன் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மனதில் அந்த மணியோசை தேவகானமாய் ஒலித்தது. அப்பாடா இன்றைய வேலை முடிந்தது என்று எல்லோர் முகத்திலும் ஒரு பெரும் நிம்மதி பரவியது. நிற்கக்கூட நேரமில்லாமல் வேலை செய்ததன்   அறிகுறியாய் அனைவர் முகத்திலும் பெரும் சோர்வு பரவி கிடந்தது. சங்கு ஊதியதும் அனைவரும் முகம் பளிச்சிட தங்கள் வேலையை அப்படியே நிறுத்தி விட்டு ,   வேகமாய் அருகிலிருந்த தங்களுடைய கைப்பையை எடுத்துக் கொண்டு தொழிற்சாலையின் வெளியேறும் பகுதியை நோக்கி விரைந்தனர். பெ ங்களூரில் இன்டஸ்ட்ரியல் ஏரியா என்று அழைக்கப்படும் முக்கியமான பகுதியில் இருந்தது அந்த கர்மெண்ட் ஃபேக்டரி. நடுத்தர வர்க்கத்தினருக்கு சற்றாய் கீழ இருக்கும் பல குடும்பங்களுக்கு அந்த தொழிற்சாலை த

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-28

Image
அத்தியாயம்-28  மா லை ஆனதும் கண் விழித்த ஆதித்யா அவன் உறங்கும் முன்னே நடந்ததை நினைத்து கொண்டு குறும்பாக சிரித்து கொண்டே அவள் படுக்கையில் அவளின் வாசத்தை இன்னும் முகர்ந்து அனுபவித்தான்... அப்பொழுது வெளியில் ஏதோ பேச்சு சத்தம் கேட்கவும் கூர்ந்து கவனித்தான்.. “ஐ மிஸ் யூ டார்லிங் ... ஐ லவ் யூ... “என்று யாரையோ கொஞ்சி கொண்டிருந்தாள் பவித்ரா... அதை கேட்டதும் அவனுக்கு திக் என்றது.. “இது யாருடா நம்ம கதைல புது வில்லன்?? .. “ என்று புலம்பியவாறு மெல்ல எழுந்து ஜன்னல் வழியாக வெளியில் எட்டி பார்த்தான்.. அங்கு ஒரு பெரிய குட்டீஸ் கேங் உட்கார்ந்து இருக்க பவித்ரா அவர்களுக்கு நடுவில் அமர்ந்து ஒரு குட்டி பொண்ணை வைத்து கொஞ்சி கொண்டிருந்தாள்.. எல்லார் கையிலும் அவள் வாங்கி வந்திருந்த சாக்லெட் ம் ஸ்வீட் பாக்ஷ்ம் இருந்தது... எல்லார் முகத்திலும் அப்படி ஒரு சிரிப்பு...அந்த குழந்தைகளின் நடுவே அவளும் சிறுபெண்ணாக சிரித்துகொண்டு அமர்ந்து இருந்தாள்.. “பவித்ரா... நீ இல்லாமல் எங்களுக்கெல்லாம் செம போர்.. நீ ஏன் கல்யாணம் பண்ணிகிட்டு போன?? .. பேசாம எங்க கூடயே இருந்திருக்கலாம் இல்ல.. வி மிஸ்ட் யூ சோ மச் .. “ என்றது ஒரு வாண

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!