தவமின்றி கிடைத்த வரமே-42
அத்தியாயம்-42 ம றுநாள் காலை கண் விழித்த பனிமலருக்கோ கை கால்களை அசைக்க முடியவில்லை.. உடல் எல்லாம் வலி பின்னி எடுக்க, அப்பொழுது தான் நேற்று இரவு தன் கணவனின் முரட்டு அணைப்பு நினைவு வந்தது.. பார்க்க ரொம்ப அமைதியாக இருப்பவன் எப்பொழுதுமே தன் மனைவியை அணைப்பதில் வேகம் இருக்கும்.. அதிலும் நேற்று இருந்த கோபத்திற்கு அவன் கோபத்தையெல்லாம் அவளிடம் வேறு விதமாக கொட்டி இருந்தான்.. அவன் முரட்டு அணைப்புக்கு முதலில் மலர் எதிர்த்தாலும் பின் அவளுமே அவனுள் அடங்கி அவனுக்கு வளைந்து கொடுத்தது நினைவு வந்தது.. ஏனொ தன் கணவன் மீது கோபம் ஆத்திரம் எதுவும் வரவில்லை அவளுக்கு. மாறாக உதட்டில் மெல்லிய புன்னகை படர்ந்தது.. “அப்பா.. சரியான முரட்டு மெக்கானிக்..” என்று செல்லமாக திட்டிக் கொண்டவள் நேற்று இரவு முதலில் ஏன் அவனை தடுத்தாள் என்றதற்கான காரணம் நினைவு வர, கூடவே நேற்று இரவு சம்பவமும் நினைவு வர, பதட்டமாக தன் அலைபேசியை எடுத்து சுசிலா எண்ணிற்கு அழைத்தாள்.. அவரிடம் சில விளக்கங்களை கேட்ட பிறகுதான் நிம்மதியாக இருந்தது.. அதன் பின் மெல்ல எழுந்து சூடான நீரில் குளிக்க, அவள் அசதியெல்லாம் பறந்து அவள் மனதி...