தவமின்றி கிடைத்த வரமே-1
அத்தியாயம்-1 இளஞ்சோலை பூத்ததா என்ன ஜாலம் வண்ண கோலம்... ஒரு பூந்தென்றல் தாலாட்ட சில மேகங்கள் நீரூற்ற இளஞ்சோலை பூத்ததா…. என்ற இனிமையான பாடல் தன் அருகில் ஓடிக் கொண்டிருப்பவரின் பாக்கெட்டில் இருந்த அலைபேசியில் இருந்து ஒலிக்க, அதை ரசித்த படியே தன் காலை ஓட்டத்தை ஓடிக் கொண்டிருந்தான் நம் பயணத்தின் நாயகன்... அப்பொழுது தான் நினைவு வந்தது அவன் காதலி இன்னும் வந்திருக்க வில்லையே என்று... எப்பொழுதும் அவன் வருமுன்னே வந்து அவனுக்காக காத்திருப்பவள் இன்று இன்னும் வரவில்லையே... என்று ஏக்கமாக சுற்றிலும் பார்த்தான்.... அவனின் தேடலை கண்டு கொண்டாளோ என்னவோ.. அவனை மேலும் தேடி ஏங்க வைக்காமல் அடுத்த நொடி அவன் முன்னே வந்து நின்றாள்.... அவளின் வருகையை உணர்ந்தவன் முகத்தில் புன்னகை அரும்ப, தன் முகத்தை நிமிர்த்தி அவள் முன்னே நீட்ட, அவளும் அவனை ஏமாற்றாமல் சில்லிட்டிருந்த தன் கரங்களால் அவன் முகத்தில் கோலமிட்டு அவனுக்கு குறுகுறுப்பை மூட்ட அதில் மெல்ல வெக்கப்பட்டு அதை அனுபவித்து ரசித்தான்... அவன் வெக்கப்படும் அழகை ரசித்த அவனின் காதலி மேலும் முன்னேறி அவன் முன் உன்னுச்சி கேசத்தை செல்லமாக கலை...