காதோடுதான் நான் பாடுவேன்-31
அத்தியாயம்-31 இ ரண்டு வாரம் கடந்து இருந்தது... அன்று ஞாயிற்றுகிழமை... காலையில் இருந்தே பரபரப்பாக இருந்தாள் அகிலா... அவளுடைய வார்ட்ரோபில் இருக்கும் ட்ரெஸ் சை ஒவ்வொன்றாக எடுத்து அதை தன் மேல் வைத்து பார்த்து அது அழகாக இருக்கிறதா என்று தன் அண்ணியிடம் அபிப்ராயம் கேட்டு தன் பெட்டியில் அடுக்கி கொண்டிருந்தாள்... அவள் முகத்தில் ஒளிர்ந்த 1000 வாட்ஸ் பல்பை கண்டு உள்ளுக்குள் பொருமியவாறு தன் முகத்தை உர் ரென்று வைத்து கொண்டு கட்டிலில் அமர்ந்து கொண்டு அகிலாவையே பார்த்து கொண்டு இருந்தாள் மதுவந்தினி.... தன் அண்ணியின் முகத்தில் தெரிந்த ஏக்கத்தை கண்ட அகிலா, “அண்ணி... வேணும்னா நான் அண்ணாகிட்ட இன்னொரு தரம் கேட்டு பார்க்கவா... நீங்களும் எங்க கூட வர “ என்றாள் பாவமாக... “ஆமா... அந்த சிடுமூஞ்சி கேட்ட உடனே ஈ னு இளிச்சுகிட்டு உடனே அனுப்பிட்டாலும்.... வேண்டாம் அகி... நீ கிளம்பு... “ என்றாள் மது எரிச்சலுடன்... “ஹ்ம்ம்ம் சரி விடுங்க அண்ணி.. உங்க பரிட்சை எல்லாம் முடிங்க.. நீங்களும் நானும் மட்டும் தனியா போய் சுத்திட்டு வரலாம்.... “ என்று கண் சிமிட்டினாள் சிரித்தவாறு.. அதை கேட்டு மது புன்னகைக்க, “ஹப்பா.. அ...