தவமின்றி கிடைத்த வரமே-6
அத்தியாயம்-6 ம றுநாள் மாலை 5 மணி அளவில் தன் அன்றைய பணிகளை எல்லாம் முடித்து தன் அறையில் நேற்று பனிமலர் அனுப்பி வைத்திருந்த அந்த குழந்தையின் ரிப்போர்ட் ஐ ஆராய்ந்து கொண்டிருந்தான் வசீகரன்... அப்பொழுது அவன் அறையின் கதவை மெல்ல திறந்து கொண்டு ஒரு பெண் மெதுவாக அவனுக்கு கேட்காமல் தன் மூச்சை அடக்கி கொண்டு பதுங்கியவாறு நுனிக்காலில் நடந்து உள்ளே வந்தாள்.. அந்த அறையில் நடந்து கொண்டே அந்த ரிப்போர்ட் ஐ ஆராய்ந்து கொண்டிருந்தவன் இப்பொழுது வாயிற்பக்கம் முதுகு காண்பித்து நிக்க, உள்ளே வந்த அந்த பெண் வசியின் கண்களை தன் இரு மென்கரங்களால் அழுந்த மூடிக் கொண்டாள்.... திடீரென்று யாரோ தன் கண்ணை பொத்தவும் திடுக்கிட்ட வசி, அடுத்த நொடி அது யாரென்று புரிந்ததால் உதட்டில் புன்னகை தவழ “ஹே ... மிது.. எப்படி இருக்க?? எப்ப ஜெனிவால இருந்து வந்த ?? “ என்று கேட்டவாறு அவள் கையை விளக்கி அவளை தன் பின்னால் இருந்து முன்னால் இழுத்தான் வசி .... “ஹா ஹா ஹா யூ ஆர் சோ ஸ்மார்ட் வசி டார்லிங்... அது எப்படி என் கையை கூட தொடாமல் நான் தான் னு கண்டுபிடிச்ச?? ..” என்றாள் கொஞ்சலாக சிரித்தவாறு... “ஹா ஹா ஹா.. உன்னை தெரியாத என...