தவமின்றி கிடைத்த வரமே-25
அத்தியாயம்-25 அ ரண்மனை போல இருந்த வீடு மிகவும் அமைதியாக இருந்தது... மீனாட்சியும் சுந்தரும் தங்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்றிருக்க, வசீகரன் வழக்கம் போல மருத்துவமனைக்கு சென்றிருந்தான்... அடுத்த நாளில் இருந்து ஆரம்பிக்கும் மாத தேர்வுக்காக தயார் பண்ணுவதற்காக வீட்டில் தனியாக இருந்தாள் வசுந்தரா.... தன் பெற்றோர்கள் மற்றும் அண்ணன் கிளம்பி சென்ற சிறிது நேரத்தில், கீழிறங்கி வந்தவள் சமையலறைக்கு சென்று ஒரு நாற்காலியை இழுத்து வந்து போட்டு அதன் மீது மற்றொரு சிறிய ஸ்டூலை வைத்து அதன் மீது ஏறி நின்று கொண்டு மேலே அலமாரியிலிருந்து எதையோ எடுக்க முயன்று கொண்டிருந்தாள்… கால்களை எக்கி நின்று கொண்டு எடுக்க முயன்றாலும் கண்கள் யாராவது வந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் சுற்றிலும் பார்த்துக் கொண்டே அவள் தேடியதை தேடிக் கொண்டிருந்தாள்.... மேலே இருந்த ஒவ்வொரு டப்பாவையும் கை நீட்டி எடுக்க முயன்று கொண்டிருந்தாள்... அவள் எண்ணம் தெரிந்துதான் அவள் அன்னை அவள் தேடும் பொருளை அவள் கைக்கு கிடைக்காமல் வேற எங்கோ ஒளித்து வைத்திருந்தார் போல.. அப்படி வசுந்தரா என்ன தேடுகிறாள் என்று பார்க்கிறீர்களா?? ஒரு மு...