என் மடியில் பூத்த மலரே-28
அத்தியாயம்-28 பா ரதி காரின் இருக்கையின் பின்னால் சாய்ந்து நன்றாக உறங்கியதும் இதுவரை அவளை பார்க்காததை போல நடித்து வந்தவன் இப்பொழுது திரும்பி நன்றாக பார்த்தான் ஆதி... காரில் ஏறி அவள் அருகில் அமர்ந்ததும் அவனுக்கும் என்னவோ போல இருந்தது.. அவளின் மென்மையான உடல் அவனின் மீது மோதும் போதெல்லாம் சிலிர்த்தது அவன் உள்ளே...அவள் தோளோடு தோள் இடித்து அமர்ந்து அவளின் நெருக்கத்தை, அது தந்த சுகத்தை அனுபவித்தான்... அவள் அடிக்கடி ஓரக்கண்ணால் தன்னை பார்ப்பது தெரிந்தும் அவன் வேண்டும் என்றே தன் நண்பன் நிகிலனிடம் இல்லாத கதை எல்லாம் இழுத்து வைத்து பேசிக் கொண்டிருந்தான் அவளை ஓரப்பார்வை பார்த்துக் கொண்டே... இவர்களின் நாடகத்தை கண்ட நிகிலன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.. ஆதி ஏதோ அவனிடம் பேச முனைய, “டேய் மச்சான்.. போதும் உன் நடிப்புடா... சிஸ்டர் அப்பயே தூங்கிட்டாங்க... நீ இனிமேலும் நடிக்க வேண்டாம்.. “ என்று சிரித்தான் நிகிலன்.. “ஹீ ஹீ ஹீ.. டேய் நிகில்.. எப்படிடா கண்டுபிடிச்ச?? “ என்று அசடு வழிந்தான் ஆதி... “டேய்... நான் ஒரு போலிஸ்காரன் டா... என்கிட்டயே உன் நடிப்பை காட்டறியா?? எப்பவும் நாலு வார்த்தைக்...