உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-15
அத்தியாயம்-15 ப வித்ரா தனக்கு நீச்சல் தெரியும் என்று அளந்து விட்ட கதையை நம்பி அவளை வம்பிழுக்க என்று அவளை பிடித்து நீச்சல் குளத்திற்குள் தள்ளி விட்டிருந்தான் ஆதி... ஆனால் அவளோ நீச்சல் அடிக்காமல் நன்றாக மூழ்க ஆரம்பித்து இருந்தாள். கொஞ்ச நேரம் அவளையே பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தவன் கடைசியாக உள்ளே சென்றவள் வெளியில் வராததால் ஏதோ விபரீதம் என்று புரியவும் அடுத்த நொடி நீருக்குள் பாய்ந்திருந்தான்... அவளை அப்படியே கையில் அள்ளி நடந்தே வந்து குளத்தின் மேலெ விட்டவன் வேகமாக மேலே ஏறி அவளை பார்த்தான்... அவள் மயங்கி இருந்தாள்.... அப்பொழுது தான் தெரிந்தது அவளுக்கு நீச்சல் தெரியாது என்று...அந்த குளம் ரொம்பவும் ஆழம் இல்லைதான்...ஆனால் பவித்ரா குட்டையாக இருந்ததாலும் மேலும் அவன் தள்ளிவிட்ட பயத்திலுமே உள்ளே முழ்கி நிறைய தண்ணியை குடித்திருந்தாள்... அவள் அசையாமல் இருப்பதை கண்டவன் கொஞ்சம் ஆடித்தான் போனான்... வேகமாக தனக்கு தெரிந்த முதலுதவியை செய்தான்... அவள் வயிற்றை நன்றாக அழுத்தி உள்ளே குடித்திருந்த நீரை வெளியேற்றினான்... பின் காலை நன்றாக தேய்க்க ஆரம்பித்தான்.. டாக்டரை அழைக்கலா...