காதோடுதான் நான் பாடுவேன்-16
அத்தியாயம்-16 மீ ண்டும் ஒரு மாதம் ஓடியிருந்தது.. மது இப்பொழுது ஸ்டேட் லெவெல் போட்டிக்காக மும்முரமாக பயிற்சி செய்து கொண்டிருந்தாள்... அகிலாவும் நேசனல் லெவல் க்காக கடுமையாக பயிற்சி செய்து வந்தாள்... நாளை அவளுடைய போட்டி.. சென்னையிலயே நடக்க இருந்தது.. காலையில் ஸ்கூல் க்கு போகும் முன்னே தன் அண்ணனிடம் நாளைக்கு போட்டிக்கு எல்லாரும் அவளுடன் வரவேண்டும் என்று சொல்ல அதற்கு நிகிலன் மறுத்து விட்டான்... “அதென்ன பொண்ணுங்க மட்டும் எங்க போனாலும் கும்பலை கூட்டிகிட்டு போறது?? இது என்ன கல்யாணமா?? குடும்பத்தோட போறதுக்கு... அதோட நீ எந்த பாடி கார்ட்ம் இல்லாமல் தனியா நின்னு எல்லா சிட்சுவேசனையும் பேஸ் பண்ணனும்.. “ என்று தன் வழக்கமான லெக்சரை அடிக்க, சமையல் அறையில் இருந்து இதை கேட்டு கொண்டிருந்த மதுவுக்கு கடுப்பாக வந்தது... தன் அண்ணனின் மறுப்பை கேட்டதும் அகிலாவின் முகம் வாடி விட்டது.... சென்ற முறை அகிலா ஸ்டேட் லெவல் விளையாடறப்போ மகிழன் ஒரு நாள் அலுவலகம் விடுப்பு எடுத்து கொண்டு தன் தங்கையுடன் வந்திருந்தான்.. அவள் விளையாடும்பொழுதெல்லாம் அவளுக்கு உற்சாக படுத்தினான்... அவள் ஒன்றிரண்டு சுற்றுகளில் தோற்க, ...