என் மடியில் பூத்த மலரே-32
அத்தியாயம்-32 ஒன்பதாவது மாதம்: தன் திருமணப் பட்டு புடவையை கட்டி முன்னால் இருந்த பிளிட்ஷை அழகாக மடித்து எடுத்து தன் மேடிட்டிருந்த வயிற்றில் சொருகினாள் பாரதி... கட்டி முடித்தவள் கண்ணாடியில் பார்க்க, அந்த பட்டு புடவை அவ்வளவு அழகாக இருந்தது அவளுக்கு... திருமணத்தன்று இருந்த மன உளைச்சலில் அப்பொழுது அந்த புடவையை ரசிக்க முடியவில்லை.. அதற்கு பிறகு இப்பொழுது தான் கட்டுகிறாள் அந்த புடவையை.. அந்த புடவையை காணும்பொழுது அவளின் திருமண நிகழ்வுகளும் தன் கணவன் அவள் கழுத்தில் தாலி அணிவித்த தருனமும் கண் முன்னே வர , மீண்டும் அந்த நாளை நினைத்து ரசித்து கொண்டிருந்தாள்... பின் நேரம் ஆவதை உணர்ந்து தலைக்கு குளித்திருந்த தன் நீண்ட கூந்தலை தளர பின்னி, குங்குமத்தை எடுத்து வகிட்டில் சிறிதாக வைத்துக்கொண்டாள்... மீண்டும் ஒரு முறை தன்னை கண்ணாடியில் பார்க்க அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது தானா அது என்று... அதுவும் ஒன்பது மாதம் வயிறு நன்றாக வெளியில் தெரிய அந்த நிறைமாத தாய்மையின் அழகில் அவள் முகம் இன்னும் பூரித்திருந்தது இன்றோடு ஒன்பதாவது மாதம் ஆரம்பித்துவிட்டது... அதை கொண்டாட, அவளுக்கு வளைகாப்பு செய்ய என்று கீ...