காதோடுதான் நான் பாடுவேன்-18
அத்தியாயம்-18 வீ ட்டிற்கு வந்ததும் தான் வாங்கிய தங்க மெடலை அந்த வேலனுக்கு அணுவித்து விட்டு, அவன் மேடையில் தனக்கு உதவாததற்கு அவனை ஒரு முறை முறைத்து விட்டு நேராக தங்கள் அறைக்குள் சென்றாள் மது... உள்ளே சென்றவள் மனம் எல்லாம் நிரம்பி வழிந்தது.. டேபிலின் மேல் இருந்த அவனின் புகைபடத்தை அப்பொழுதுதான் முதல் முதலாக ஆவலாக எடுத்து பார்த்தாள்... அவனின் கட்டுமஸ்தான உடலும், இறுகிய முகமும் அதே மிரட்டும் கண்களும் ஊடுருவும் பார்வையும் முன்பு பார்த்து பயந்து நடுங்கியவளுக்கு இன்று ஏனோ அவனின் தோற்றம் அவளை வசீகரிப்பதாக இருந்தது... “சிடுமூஞ்சி.. போட்டோல கூட அந்த விருமாண்டி மாறி முறைச்சுகிட்டே இருக்கான் பார்... கொஞ்சம் சிரிச்சா எவ்வளவு அழகா இருக்கும்..” என்று அவனை செல்லமாக திட்டி கொண்டே மெல்ல தன் கையை எடுத்து அவன் கன்னத்தை தடவி பார்த்தாள் அந்த போட்டோவில்... அவனின் நிழல் படத்தை தொடுகையிலயே அப்படி ஒரு சிலிர்ப்பு அவள் உள்ளே... மெல்ல வெக்கம் வந்து சூழ்ந்து கொள்ள மீண்டும் அவன் கன்னத்தை ஆசையாக வருடினாள்... காரை ஓட்டிகொண்டிருந்த நிகிலனுக்கு யாரோ தன் கன்னத்தை வருடுவதை போல இருக்க, அவன் உள்ளூம் அதே சிலிர்ப்பு.....