காதோடுதான் நான் பாடுவேன்-43
அத்தியாயம்-43 “ அ ம்மா உன் போட்டோவை கோவில்ல பார்த்ததில் இருந்தே அவங்களுக்கு உன்னை ரொம்ப பிடிச்சு போச்சு... உன்னை நிகிலனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ரொம்ப ஆசைபட்டாங்க.... ஆனால் இந்த விருமாண்டி மறுத்துட்டான்.. அதை கண்டு அம்மா வருத்தமா உட்கார்ந்து இருந்தப்ப தான் அம்மாகிட்ட இருந்த உன் போட்டோவை வாங்கி பார்த்தேன்... உன்னை பார்த்ததுமே நீ நிகிலனுக்கு பெர்பக்ட் மேட்ச் னு புரிஞ்சுது... அவனுடைய் முரட்டு கேரக்டர்க்கு உன்னை மாதிரி சாப்ட் ஆன ஆள் தான் செட் ஆகும் னு யோசிச்சேன்.. அவனை எப்படி மடக்கி உன்னை கல்யாணம் பண்ணிக்க வைப்பது என்று யோசித்துதான் இந்த கல்யாண நாடகத்தை ஆரம்பித்தது..... எங்கயும் நீ என்னை பார்த்துட கூடாதுனு தான் ப்ளான் பண்ணி நான் எங்கயும் முன்னால வரலை... பொண்ணு பார்க்க வந்ததில் இருந்து கல்யாண ட்ரெஸ் எடுக்கிற வரைக்கும் நிகிலனைத்தான் முன்னாடி நின்னு செய்ய வச்சேன்... அதான் உன்கிட்ட போன்ல கூட எதுவும் பேசலை எங்கயும் என்னால எதுவும் தப்பாகிட கூடாதுனு... நான் போட்ட திட்டபடியே கல்யாணம் அன்னிக்கு நான் காலையிலயே கிளம்பி கனடா போய்ட்டேன்... நான் விரிச்ச வலையில இந்த விருமாண்டியும் மாட்டிகிட்டான்...