காதோடுதான் நான் பாடுவேன்-2
அத்தியாயம்-2 வ ரவேற்பறையை ஒட்டியிருந்த விருந்தினர்கள் வந்தால் தங்குவதற்காக ஒதுக்கபட்டிருந்த அறைக்கு தன் மருமகளை சென்று ஓய்வெடுத்து கொள்ள சொல்லி அனுப்பி வைத்திருந்தார் சிவகாமி... மதுவும் விட்டால் போதும் என்று அந்த அறைக்குள் நுழைந்தவள் அங்கு இருந்த கட்டிலில் அமர்ந்து காலையில் நடந்த கூத்தையெல்லாம் மனதில் ஓட்டி பார்த்து வெந்து கொண்டிருந்தாள்... அந்த நேரம் அந்த அறையின் கதவை திறந்து கொண்டு ஒரு பெண் எட்டி பார்த்தாள்...அழகான வேலைப்பாடு மிக்க லகங்கா அணிந்து, அதற்கு மேச்சாக காதணிகளும் கையில் வளையல்களையும் அணிந்து, இடைக்கும் கொஞ்சம் மேலாக தொங்கிய சடையில் மல்லிகை பூவை மடித்து தொங்க விட்டு நெற்றியில் சிறிய நெற்றி சுட்டியும் கழுத்தில் மின்னிய நெக்லஸ் ம் அவள் மாப்பிள்ளை வீட்டிற்கு மிக நெருங்கிய சொந்தம் போல காட்டியது.... முகத்தில் குழந்தைதனமும் கண்ணில் மின்னும் குறும்புமாக தன்னை நோக்கி வந்தவளை உற்று பார்த்தாள் மதுவந்தினி.. அவளை கண்டதும் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்தாள் மது... அதற்குள் அந்த பெண் அருகில் வந்தவள், “ரெஸ்ட் எடுக்கறீங்களா அண்ணி?? சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?? “ என...