என் மடியில் பூத்த மலரே-20
அத்தியாயம்-20 மா லை ஆறு மணிக்கு பாரதி ரெடியாகி வரவேற்பறையில் அமர்ந்து இருந்தாள்.. அழகான காட்டன் புடவையும், நீண்ட தளர்த்தி பின்னிய பின்னலும், அதில் கொஞ்சமாக மல்லிகை பூவையும் வைத்திருந்தாள்.. வழக்கம் போல சின்ன பொட்டும் அதுக்கு மேல அந்த முருகனின் திருநீற்றையும் வைத்திருந்தாள்... கையில் எப்பவும் அணியும் கண்ணாடி வளையல்களை அணிந்திருந்தாள்... வரவேற்பறையில் அமர்ந்து இருந்தவள், கையில் நேற்று மாலை படித்து கொண்டிருந்த அதே புத்தகத்தை வைத்துக் கொண்டு இன்றும் ஆர்வமாக படித்துக் கொண்டிருந்தாள்.... அதை படிக்க படிக்க மிகவும் சுவராஷியமாக இருந்தது.. படித்து கொண்டிருக்கும் பொழுதே அந்த புத்தகத்தை படிக்க காரணமானவரையும் அதற்கான சந்தர்ப்பத்தையும் அசை போட்டாள்... பாரதி சென்னைக்கு வந்து ட்ரீட்மென்ட் ஆரம்பித்து ஒரு வாரம் கடந்திருக்கும்... முதல் இரண்டு நாட்கள் பாரதியால் எப்படியோ அந்த வீட்டுக்குள்ளயே இருக்க முடிந்தது... முதலில் காலையிலும் மாலையிலும் அருகில் உள்ள கடற்கரைக்கு சென்று விடுவாள்..அங்கு தன் காதலனோடு கதை அடித்தும், அந்த கடலின் அலையில் தன் கால்களை நனைத்து அந்த அலைகளோடு கொஞ்ச நேரம் கொஞ்சி...