என் மடியில் பூத்த மலரே-14
அத்தியாயம்-14 உ ங்கிட்ட மடிப்பிச்சை கேட்குறேன்... என் குலத்தை வாழ வை “ என்று கண் கலங்கி தன் முந்தானையை நீட்டினார் பாரதியின் முன்னே ஜானகி..... அதை கண்டதும் பதறிய பாரதி, “ஐயோ !! என்ன அத்தை இது?? ... நீங்க போய் பிச்சை அது இது னு... பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிகிட்டு... நீங்க எங்களுக்கு செஞ்ச உதவிக்கு ... “ என்று சொல்லும் பொழுதே நேற்று சுசிலாவும் ஜானகியும் அறையில் பேசி கொண்டு இருந்தது ஞாபகம் வந்தது... எவ்வளவு பெரிய உதவியை தங்களுக்கு செய்து இருக்கிறார்.. இவர் மட்டும் அந்த இக்கட்டான நேரத்தில் பணம் கொடுத்து உதவி இருக்காவிட்டால் தன் தந்தை நிலை என்னாவாயிருக்கும்” என்று நினைத்து பார்த்தாள் பாரதி ஜானகியோ பாரதி உதவி என்றதும் தான் அவர்களை பார்த்து கொண்டதைத்தான் குறிப்பிடுகிறாள் என்று புரிந்துகொண்டு “அச்சோ!!.. நான் உன் கூட இருந்து பார்த்துகிட்டதை போய் உதவினு சொல்லாத பாரதி.. அதையும் நான் கேட்ட இந்த உதவியையும் முடிச்சு போடாத... நான் அதை ஒரு அண்ணனுக்கு செஞ்சதாகத்தான் நினைக்கிறேன்.. சொல்ல போனால் அப்ப இந்த மாதிரி உங்கிட்ட கேட்கனும் என்ற எண்ணமே இல்லை.. நேற்று உன்னை பற்றி தெரிந்த பிற...