என் மடியில் பூத்த மலரே-10
அத்தியாயம்-10 தா ன் நினைத்த மாதிரியே அந்த முருகன் உத்தரவு கொடுத்து விட்டதால் ரொம்பவும் மகிழ்து போனார் ஜானகி.. உடனே போனை கையில் எடுத்து சுசிலாவை அழைத்தார்... ஜானகியின் எண்ணை பார்த்ததும் அதிர்ந்து போனார்.. போனை அவசரமாக எடுத்து “சொல்லு ஜானு?? என்னாச்சு?? “ என்று வேகமாக வினவினார்... “ஹே!! பயப்படாத சுசி.. நான் வீட்டுக்கு வந்திட்டேன்.. சும்மாதான் போன் பண்ணினேன் “ என்று சிரித்தார்.... “தாயே!! இனிமேல் சும்மா எல்லாம் வேலை நேரத்துல போன் பண்ணாத... உன் போனை பார்த்தாலே எனக்கு பிபி ஏறுது உனக்கு என்ன ஆச்சோனு “ என்று முறைத்தார். அதை கேட்டதும் நெகிழ்ந்து போனார்.. “இந்த சுசிலாவுக்கு தான் என் மேல எவ்வளவு பாசம்” என்று “ஹே சொல்லுடி... போன் பண்ணிட்டு தூங்கிட்டியா” என்றதும் நினைவுலகத்திற்கு வந்தவர்... “சுசி.. நாம ஒரு பொண்ணை தேடிகிட்டு இருந்தோம் இல்லை.. அந்த பொண்ணு கிடைச்சாச்சு” என்று உற்சாகமாக சொன்னார்.. “வாவ்.. சூப்பர்... யாரு டீ அது?? “ “எல்லாம் நமக்கு தெரிஞ்ச பொண்ணுதான்... “ “ஹ்ம்ம்ம் எனக்கு தெரிஞ்ச பொண்ணுனு யாரும் இல்லையே!! ரொம்ப பீடிகை போடாமல் யாருனு சொல்லு” “ஹ்ம்ம்ம்ம் அது...