என் மடியில் பூத்த மலரே-33
அத்தியாயம்-33 ஆ தி மஹா வளைகாப்பை பார்த்து வந்த பிறகு தன் மகளுக்கும் அது மாதிரி விழா வைக்கனும் என்று ஆரம்பிக்க, ஜானகிக்கு திருமணத்தின் பொழுதே பாரதி அவள் பெற்றோர்கள் இல்லாமல் மனம் வாடியது நினைவு வந்தது.. அட்லீஸ்ட் இந்த பங்சனுக்காவது அவள் பெற்றோர்களை அழைத்து வர வேண்டும் என்று முடிவு செய்தார்.. அப்பொழுது உடனே போய் உண்மையை சொல்ல முடியாது.. தர்மலிங்கம் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று தெரியாமல் எதுவும் சொல்ல முடியாது என்று தெரிந்து அதை அப்போதைக்கு தள்ளி வைத்தார்... மீண்டும் ஒன்பதாவது மாதத்தில் ஆதி திரும்பவும் அந்த பேச்சை ஆரம்பிக்க, ஜானகி அவனை தனியாக அழைத்து பாரதி மனதில் இருக்கும் குறையை சொல்ல அவனுமே எப்படியாவது அவளை அவள் குடும்பத்துடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்து சுசிலா மற்றும் கமலாவையும் கலந்து என்ன செய்யலாம்?? இதை எப்படி தர்மலிங்கத்திடம் சொல்லுவது என்று கலந்து அலோசித்து ஒரு திட்டத்தை தீட்டினர்... அதன்படி தர்மலிங்கத்தின் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று தெரிந்து அதுக்கு தகுந்த மாதிரி அந்த செய்தியை சொல்ல முடிவு செய்து பாரத்திடம் சொல்லி அவரை செக்கப் பண்ண திரு...