என் மடியில் பூத்த மலரே-23
அத்தியாயம்-23 ம றுநாள் காலை அழகாக விடிந்தது.. வழக்கம் போல பாரதி எழுந்து குளித்து முடித்து அந்த ஆதவனை கொஞ்சி பின் கீழ சென்றாள்... சமையல் அறைக்கு சென்றவள் இருவருக்கும் காபி தயாரித்தாள்... எதேச்சையாக ஜன்னலில் பார்த்தவள் அங்கு ஆதி ஜாகிங் செய்து கொண்டிருந்தான்... அவள் மனம் அவளை அறியாமல் அவனிடம் தாவியது...முன்னால் இருந்த அடர்ந்த முடி கற்றையாக காற்றில் ஆட அவன் ஓடிக்கொண்டிருக்கும் அழகையே ரசித்து கொண்டிருந்தாள்... யாரோ தன்னை உற்று பார்ப்பது போல தோன்றவும் ஆதியும் திரும்பி பார்த்தான்... அவன் தன்னை பார்ப்பது தெரியவும் அழகாக புன்னகைத்தாள் அவனை பார்த்து... குளித்து முடித்து புதுமலராக இருந்தவளை திடீரென்ரு பார்க்கவும் அப்படியே உறைந்து நின்றான் சில விநாடிகள்.. அவன் மனமும் அவளிடம் தாவியது... அதுக்குள் சுதாரித்து கொண்டவன் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளி வர அவளை திரும்பி முறைத்து விட்டு தன் ஓட்டத்தை தொடர்ந்தான் ... அதைக் கண்ட பாரதியின் முகம் வாடியது... “சே!! சிரிச்சா பதிலுக்கு ஒரு சின்ன ஸ்மைல் பண்ணாதான் என்னவாம் அவனுக்கு... காலையிலயே முறைக்கிறான்... சிடுமூஞ்சி..” என்று திட்டிகொண்டே தன் வேலையை த...