காதோடுதான் நான் பாடுவேன்-33
அத்தியாயம்-33 ம றுநாள் காலை கண் விழித்தவள் தான் தன்னிடத்தில் இல்லாமல் தன் கணவனின் கட்டிலில் இருப்பதை கண்டு திகைத்தாள் மதுவந்தினி... பின் நேற்று இரவு சம்பவங்கள் கண் முன்னே வர, அவள் கன்னங்கள் தானாக சிவந்தன... அதுவும் வெளியில் பார்ப்பதற்கு கரடு முரடாக, இறுகி, முரட்டுதனமாக தோன்றும் தன் கணவன் அவளிடம் மென்மையாக நடந்து கொண்டதும் அவளுக்கு வலித்து விடுமோ என்று தயங்கி மென்மையாக அவளை தீண்டியதும் நினைவு வர அவன் மேல் இன்னும் காதல் பெருகியது அவளுக்கு.... “எவ்வளவு நல்லவன் என் புருசன்...!!! இவனை கணவனாக அடைய நான் கொடுத்து வச்சிருக்கணும்... ரொம்ப நன்றி வேல்ஸ் இப்படி ஒரு புருசனை எனக்கு கொடுத்ததுக்கு... “ என்று அந்த நிலையிலும் தன் நண்பனுக்கு நன்றி சொன்னாள் மது... பின் மெதுவாக தலையை நிமிர்த்தி ஓரக் கண்ணால் தன் கணவனை பார்க்க, அவளை அணைத்தவாறே அவன் அசந்து உறங்கி கொண்டிருந்தான்.... கடந்த இரண்டு நாட்களாகவே அவனுக்கு சரியாக தூக்கம் இல்லாமல் அலைந்தவன் இப்பொழுது அடித்து போட்ட மாதிரி உறங்கி கொண்டிருந்தான்... உறங்கும் பொழுதும் விரைத்து கொண்டே உறங்குபவனை, அவன் நாசியில் இருந்து வரும் மூச்சு காற்றை அவன...