என் மடியில் பூத்த மலரே-27
அத்தியாயம்-27 க ந்த சஷ்டி கவசம் இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தது அந்த முருகன் கோவிலில் அந்த கோயிலின் முன்னே இருந்த மண்டபத்தின் நடுவில் ஐயர் அமர்ந்து ஏதோ பூஜைக்கான ஏற்பாடுகளை பண்ணிக்கொண்டிருந்தார்.. அது ஒரு திருமணத்திற்கான சடங்குகளுக்கான ஏற்பாடு.. ஐயர் கேட்கும் பொருட்களை எல்லாம் மலர்ந்த முகத்துடன் எடுத்து கொடுத்துக் கொண்டிருந்தார் ஜானகி... அவரின் அருகில் சுசிலாவும் நின்று கொண்டு சிரித்த முகமாக அங்கு நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.. இருவரும் ஒரே மாதிரி ரொம்பவும் வேலைப்பாடு இல்லாமல் சிம்பிளான பட்டு புடவையை அணிந்திருந்தனர்.. அவரின் அருகில் கமலா டாக்டரும் அவரின் கணவர் கண்ணனும் நின்று கொண்டிருந்தனர்... அவர்களின் அருகில் மற்றொரு பெண்மணியும் பின் மேனேஜர் சுந்தரம் மற்றும் மாரி, முத்து என்று அனைவரும் அங்கு கூடி இருந்தனர்.. எல்லார் முகத்திலும் ஒரு மகிழ்ச்சி குடிகொண்டிருந்தது.. ஒரு வழியாக ஐயர் எல்லா பொருட்களையும் எடுத்து வைத்து முன்னால் இருந்த ஹோம குண்டத்தை பற்ற வைத்து அக்னியை வளர்த்து சில சடங்குகளை செய்தார்.. பின் ஜானகியை பார்த்து “பொண்ணை அழைச்சுட்டு வாங்க ஜானகி மா... “ என்றார்... ...