உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-60(pre-final)
அத்தியாயம்-60 கோ பமாக வெளியேறி சென்ற ஆதி தோட்டத்தில் இறங்கி நடக்க , அப்பொழுது அவன் அலைபேசிக்கு மெசேஜ் வந்திருக்க , அதை எடுத்தவன் எதேச்சையாக அதில் இருந்ததை பார்க்க , அதுவரை பொங்கி வந்த கோபம் மறைய உதட்டில் புன்னகை அரும்பியது... அதே புன்னகையுடன் தன் அறைக்கு திரும்பி வந்தவன் பவித்ரா இன்னும் சோபாவில் கவலையாக அமர்ந்து இருப்பதை கண்டு , அவள் அருகில் சென்றவன் “என்ன ?? ... இன்னும் உனக்கு என் மேல நம்பிக்கை இல்லைனா இத பார்... “ என்று தன் அலைபேசியை நீட்டினான்.. அதில் ஆதி ரெகார்ட் பண்ணிய காரில் பவித்ரா போதையில் உளறிய வீடியோ இருந்தது.. அதை பார்த்தவள் திடுக்கிட்டாள்.. தானா அந்த மாதிரி பேசியது ?? என்று வெட்கமாக இருந்தது.. ஆதி அவள் காரில் உளறியதை எல்லாம் ரெகார்ட் பண்ணியிருந்தான்... காரை விட்டு இறங்கும் பொழுது அதை அணைக்க மறந்து அப்படியே தன் பாக்கெட்டில் வைத்திருக்க , படுக்கை அறையில் அவள் அவனிடம் முத்தம் கேட்டு வம்பு பண்ணியது வரை வீடியோ இல்லாமல் ஆடியோ மட்டும் பதிவாகியிருந்தது... அதை முழுவதும் பார்த்தவளுக்கு வெட்கமாகி போனது... அவன் முக...