காதோடுதான் நான் பாடுவேன்-19
அத்தியாயம்-19 அ ன்று அதிகாலையில் எழும்பொழுதே மிகவும் உற்சாகமாக உணர்ந்தான் ஜெயந்த்.. இன்று மட்டுமா?? அவளை சந்தித்த நாளில் இருந்தே ஒவ்வொரு நாளும் அவனுக்கு உற்சாகமான நாள் தான்... இரவு எவ்வளவு தாமதமாக உறங்கினாலும் காலையில் எழும்பொழுது அதுவும் தன் மனதுக்கு பிடித்தவளின் முகத்தை நினைக்கும் பொழுதே அவனுக்கு சோர்வு பறந்து புத்துணர்ச்சி வந்து ஒட்டி கொள்ளும்... இன்றும் அலார்ம் அடித்து முடித்ததும் அதை நிறுத்தியவன் படுக்கையில் இருந்தவாறே அவளின் அந்த பால்வடியும் முகத்தை மனதில் கொண்டு வந்தான்... உடனேயே அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.. அதுவும் நேற்று அவள் அணிந்து வந்திருந்த சுடிதாரும் தன் நீண்ட சடையில் தொங்க விட்டு வைத்திருந்த மல்லிகை பூவும் இப்பொழுதும் அவனை கட்டி இழுத்தது.. நேற்று ஏனோ அவள் வகுப்பு நடக்கும் இடத்தை அடிக்கடி தாண்டி சென்றான்... ஏன் என்ற காரணம் தெரிந்த பொழுதும் சிறு பையனாக அதை ரசிக்கவே செய்தான்.. ஏனோ தொலைவில் இருந்து ரசிக்க வரும் தைர்யம் அவளை நேருக்கு நேராக பார்க்கும் பொழுது , பார்த்து தன் மனதில் இருப்பதை சொல்லுவதற்கு தான் தைர்யம் வரவில்லை.. கடந்த 5 மாதங்களாக அவளை தொலைவில...