என் மடியில் பூத்த மலரே-24
அத்தியாயம்-24 ஐந்தாவது மாதம்: அ ன்று வழக்கம் போல அந்தி சாயும் நேரத்தில் தோட்டத்தில் உலாவி விட்டு வீட்டிற்குள் வந்த பாரதி ஷோபாவில் அமர்ந்து தன் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாள்... ஆனால் அவள் நினைவுகளோ ஆதியை சுற்றியே வந்தது... இதோடு அவனை பார்த்து ஒரு மாதம் ஆகிறது... ஜானகியும் ஆதியும் கிளம்பி சென்றவுடன் மிகவும் சோர்ந்து போனாள் பாரதி... ஆனால் ஜானகி அடிக்கடி போனில் பேசி அவளை தனியாக இருக்க விடாமல் பார்த்துக் கொண்டார்...மார்னிங் சிக்னெஸ் ம் கொஞ்சம் குறைய கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்தாள்... ஆனால் ஏனோ அவள் தனியாக இருக்கும் நேரத்தில் மட்டும் அவள் மனம் ஆதியிடம் சென்று விடும்... அவனின் அருகாமையை தேடும்.... இது ஐந்தாவது மாதம் அவளுக்கு... பாரதியின் வயிறு மெல்ல தெரிய ஆரம்பித்தது.. நாளை செக்கப் க்கு ஹாஸ்பிட்டல் போகணும்...இந்த முறையும் அவன் கூட வருவானா?? என்று ஒரு ஆவல்... அவன் வர வேண்டும் என்று ஏங்கியது அவள் மனம்... “இவன் எதுக்கு வந்தான் என்று திட்டிய நானா அவன் வரவை எதிர்பார்ப்பது?? எப்படி இப்படி மாறிப்போனேன்... அப்படி என்னதான் மாயம் பண்ணினானோ... திருடா...” என்று செல்லமாக திட்டிக்கொண்ட...