தவமின்றி கிடைத்த வரமே-3
அத்தியாயம்-3 தோ ழியர் இருவரும் அறை எண் 8 ஐ அடைந்ததும் அதன் வெளியில் கதவில் Dr Shyam MBBS(Gen) என்று எழுதியிருக்க, அதை இருவரும் பார்த்து பின் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்... பின்னால் திரும்பி பேசன்ட்ஸ் வந்தால் அமரும் வெயிட்டிங் இருக்கையில் பார்க்க, யாரும் அங்கு இல்லை.. பார்வையை சுழற்ற பக்கத்து அறையில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.. “என்னடி இது?? இந்த டாக்டர் கிட்ட யாருமே பேசன்ட்ஸ் ஏ இல்ல... காத்து வாங்கிகிட்டு இருக்கு... அப்ப இவர் ஒரு டுபாக்கூர் டாக்டர் போல அதான் யாரும் இவர் கிட்ட வரல..” என்றாள் மலர் தன் தோழியிடம் குனிந்து. “ அப்ப நமக்கும் இவர் வேண்டாம் டி... இப்படியே போய்டலம்... “என்று மெல்ல முனகினாள் கயல்... “அடிப் போடி... இப்படி பட்ட டாக்டர் தான் நம்ம திட்டத்துக்கு லாயக்கு.. நீ கொஞ்ச நேரம் சும்மா இரு.. “ என்று தன் தோழியை அடக்கியவள் சுற்றிலும் பார்க்க, அங்கு யாரையும் காணவில்லை... “எங்கடி?? ஒரு அட்டென்டர் லேடிய கூட காணோம்?? “ என்று மேலும் புலம்பினாள் கயல்... “சே.. புலம்பாத டி.. இப்ப அட்டென்டர் இல்லைனா என்ன?? நாமளே நேரடியா உள்ள போகலாம்... ...