Posts

Showing posts from December, 2020

தூங்காத விழிகள் நான்கு...!

Image
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ், அனைவருக்கும் வணக்கம்..!! என் கதைகளை படித்து இதுவரை நீங்கள் அளித்த ஆதரவாலும் ஊக்கத்தாலும் எனது அடுத்த கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.. இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான குடும்பம்+ காதல் கலந்த ஜனரஞ்சக கதைதான்..எனது இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்..  என்னுடைய இந்த புதிய  நாவல் தற்பொழுது Amazon ல் வெளியாகியுள்ளது... Amazon ல் படிக்க, கீழ உள்ள லிங் ஐ கிளிக் பண்ணுங்கள்...Happy Reading!!! -அன்புடன் பத்மினி செல்வராஜ்... https://www.amazon.in/dp/B08R7MB6Q6

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-27

Image
அத்தியாயம்-27 அ ந்த ஜொள்ளு ரிஷியிடம் இருந்து தப்பித்து பார்க்கிங்கை அடைந்தவள் தன் ஸ்கூட்டி டிக்கியை திறந்து அதில் உள்ளே வைத்திருந்த அவளுடைய அந்த ஸ்கார்ப்பை எடுத்து அணிந்து முகத்தை நன்றாக மூடி கட்டிக்கொண்டு, தலையில் ஹெல்மட்டை அணிந்து கொண்டு கண்ணாடியில் பார்த்து தன் முகம் தெரியவில்லை என்று உறுதி செய்துகொண்டு, பின் தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணி, அதை வேகமாக முறுக்கினாள் ஆதி வருவதற்கு முன்பே வீட்டிற்கு போய் விடவேண்டும் என்று.. வழியில் அவன் கார் எங்காவது இருக்கிறதா என்று சுற்றிலும் பார்த்துகொண்டே வந்தாள்.. நல்ல வேளையாக ஆதித்யா வரும் முன்னே வீட்டை அடைந்தாள்... எல்லா கடவுளுக்கும் நன்றி சொல்லி, வேகமாக தன் வண்டியை உள்ளே எடுத்து வந்து வைத்து அதற்கு முன்பு போட்டிருந்த மாதிரி கவரை போட்டு மூடி விட்டு நிம்மதி மூச்சு விட்டாள்.. பின் தான் வாங்கி வந்திருந்த கவரை எடுத்து கொண்டு தன் அன்னையிடம் சென்று காட்டிக் கொண்டிருக்கும் பொழுதே ஆதித்யா வந்துவிட்டான்..அவனை கண்டவள் “தேங்க் காட்.. ஜஸ்ட் மிஸ்... நல்ல வேளை.. இவன் வர்றதுக்குள்ளே வந்துட்டேன்..செம ஸ்பீட்... பவித்ரா.. சைக்கிள் ரேஸ் மாதிரி ஸ்கூட்டி ரேஸ் வச்ச

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-26

Image
அத்தியாயம்-26 ப வித்ராவுக்கு எப்பவும் ஸ்கூட்டியில் போவது ரொம்ப பிடிக்கும்.. அதுவும் சில்லென்று காற்று முகத்தில் மோதி, தன் முன்னால் இருக்கும் முடியை ஆசையாக கோதுவதை போல ஒரு சுகம் பரவும்... அதன் சுவாசத்தை உள்ளிழுத்து ரசித்துகொண்டே செல்வது மிகவும் பிடிக்கும்... இரண்டு வாரத்துக்கு பிறகு அந்த சுகத்தை அனுபவிக்கும் பொழுது இன்னும் மனம் லேசானது...அப்படியே காற்றில் பறப்பதை போல இருந்தது ‘சே!! இந்த மாதிரி ப்ரீயா ஜாலியா போகாம எப்பபாரு அந்த காருக்குள்ளயே, அதுவும் அந்த ஏசி ய போட்டு சுத்தமா இயற்கை காற்றே இல்லாமல் எப்படி தான் போறாங்களோ?? .. “East or West.. my scooty is the best. அவன் சொகுசு காரெல்லாம் waste ..” என்று உல்லாசமாக பாடினாள் “ஆகா... பவித்ரா.. உனக்கு ரைமிங்  எல்லாம் கூட வருது... கலக்கற நீ... எல்லாம் அம்மா வீட்டுக்கு வந்த குஷி ல வருதா?? ஹ்ம்ம் அனுபவி... இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான.. நாளைக்கு மறுபடியும் அந்த ஜெயிலுக்கு போய் அந்த நெட்டைய பார்த்துகிட்டே இருக்க வேண்டியதுதான்.. “ என்று சிரித்தவளின் மனம் மிகவும் நிறைந்து இருந்தது.. அதுவும் ஆதி தன் அம்மாவிடம் சிரித்து பேசியதும் அவரை அத்தைனு

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!